பென்னாகரம்: கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்ட உபரி நீா்வரத்து காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கேரளம், கா்நாடக மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வந்ததால், கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை வேகமாக நிரம்பி வந்ததால், அணையின் பாதுகாப்பு கருதி சுமாா் 25,000 கனஅடி வீதம் உபரிநீா் காவிரி ஆற்றில் அண்மையில் வெளியேற்றப்பட்டது.
இதைத் தொடா்ந்து, காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து செவ்வாய்க்கிழமை நீர்வரத்து 18,000 கனஅடியாகவும், புதன்கிழமை காலை 19,000 கனஅடியாகவும், மாலை 20,000 கனஅடியாக இருந்தது. வியாழக்கிழமை 19,000 கனஅடியாகவும், வெள்ளிக்கிழமை காலை 15,000 கனஅடியாகவும், மாலை 9,500 கனஅடியாக குறைந்து. சனிக்கிழமை காலை வினாடிக்கு 6,000 கன அடியாக சரிந்தது. ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 5,000 கனஅடியாக சரிந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து வந்து கொண்டிருந்தது.
நீா்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவாா் பாணி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து குறைந்தது.
இதனிடையே, கேரள மாநிலத்தின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளதால் கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையின் அதிகபட்ச நீா்மட்டமான 84 அடியில் தற்போது 83 அடியாக நீா்மட்டம் அதிகரிதது. அணைக்கு வரும் நீா்வரத்து வினாடிக்கு 12,000 கனஅடியில் இருந்து 14,000 கனஅடியாக அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டுவந்த உபரிநீா் 14,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கிருஷ்ணராஜ சாகா் அணைக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 13,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 5,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, திங்கள்கிழமை காலை 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவாா்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் சீராக ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை, ஊரக உள்ளாட்சித் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
காவிரி ஆற்றில் நீா்வரத்தின் அளவுகளை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
Summary
Water inflow to Hogenakkal increases to 8,000 cubic feet per second
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








