நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

கொலைகார பாவிகளா... எஸ்.ஜே. சூர்யாவை பாட்டுப் பாட கோரிக்கை வைத்த ரசிகர்களின் வைரல் விடியோ!

நடிகர் எஸ்.ஜே. சூர்யாவை ரசிகர்கள் கிண்டல் செய்யும் வைரல் விடியோ குறித்து...

S. J. Suryah

நடிகர் எஸ்.ஜே. சூர்யா - படங்கள்: எக்ஸ் / ஜிவி

Published On :2 செப்டம்பர் 2026, 7:27 pm IST

சர்தார் 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவை பாட்டுப் பாட கோரிக்கை வைத்த ரசிகர்களின் விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான சர்தார் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், இதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நாயகனாக கார்த்தியும் வில்லனாக எஸ்.ஜே. சூர்யாவும் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தில் நடிகர்கள் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகிபாபு மற்றும் ரஜீஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இதன் டிரைலர் ஆக.31ஆம் தேதி வெளியானது.

இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவிடம் ரசிகர்கள் பாட்டுப் பாட கோரிக்கை வைத்தார்கள். அருகில் இருந்த கார்த்தி, “அண்ணனை ஃபிரியா விடுங்கடா கொலைகார பாவிகளா...” என்பார்.

மீண்டும் ரசிகர்கள் பாட்டுப் பாட வேண்டும் எனக் கூச்சலிட்டார்கள். இதற்குப் பதிலளித்த எஸ்.ஜே. சூர்யா, “நோ... நோ... நோ... கேக்ஸ்டர்னா டிசிப்ளின் வேணும்” என்றார். இது மார்க் ஆண்டனி படத்தில் வரும் பிரபலமான வசனம் என்பது கவனிக்கத்தக்கது.

முன்னதாக நேர்காணல் ஒன்றில் எஸ்.ஜே. சூர்யா பாட்டுப் பாடியது சமூக வலைதளத்தில் மீம்ஸ்களாக மாறியது. நானியுடனான பட புரமோஷனில், “பாட்டு மட்டும் பாடிவிடாதீர்கள் நானி சார். நான் எந்த கேலியிலும் இல்லாமல் பத்திரமாக இருந்து வந்தேன். ஆனால், ஒரு பாட்டினால் என்னை பாத்ரூமில் இருக்கும்படி எல்லாம் எடிட் செய்துவிட்டார்கள். வெச்சு செய்து விட்டார்கள்” எனக் கூறியிருப்பார்.

அந்தமாதிரி எதுவும் ஆகக்கூடாதென நடிகர் கார்த்தியும் கமெண்ட் செய்ய நடிகர் எஸ்.ஜே. சூர்யாவும் அதனை சாமர்த்தியமாக தவிர்த்துவிட்டார். இந்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Summary

You murderous sinners... A viral video of fans asking S.J. Surya to sing a song!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.