பசிந்து சூரியபந்த்ராவை திட்டமிட்டு வீழ்த்திய மானவ் சுதர்..! வைரல் விடியோ!

இந்திய சுழல் பந்துவீச்சாளர் மானவ் சுதரின் புத்திசாலிதனமான பந்துவீச்சு குறித்து...

Manav Sudhar strategically defeated Pasindu Suryabandara.

பசிந்து சூரியபந்த்ராவை திட்டமிட்டு வீழ்த்திய மானவ் சுதர். - படங்கள்: ஏபி

Published On :26 ஆகஸ்ட் 2026, 6:50 pm IST

இந்திய சுழல் பந்துவீச்சாளர் மானவ் சுதரின் புத்திசாலிதனமான பந்துவீச்சினால் இலங்கை வீரர் பசிந்து சூரியபந்த்ரா ஆட்டமிழந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கொழும்பில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 503/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியாவைவிட 200 ரன்கள் குறைவாக இருப்பதால் இலங்கை அணி ஃபாலோ ஆன் விதியின்படி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாட ஷுப்மன் கில் பணித்தார்.

இந்தப் போட்டியில் இரண்டாம் இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்துவந்த இலங்கை வீரர் பசிந்து சூரியபந்த்ரா 92 ரன்களில் மானவ் சுதர் ஓவரில் ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்த விதம்தான் வைரலாகி வருகிறது.

மானவ் சுதர் ஓவரில் பசிந்து சூரியபந்த்ரா சிறிது தூரம் ஏறி வந்து பந்துகளை தடுப்பாட்டம் செய்து வந்தார். இதனை கவனித்த மானவ் சுதர் திடீரென ஆஃப் ஸைடு ஒயிடாக பந்துவீசுவார். இந்தப் பந்தை அடிக்காமல் விட்ட பசிந்து சூரியபந்த்ரா கீப்பர் ரிஷப் பந்த்திடம் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.

இந்த புத்திசாலித்தனமான விக்கெட் இந்திய ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த விடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Summary

Manav Suthar patiently sets up Pasindu Sooriyabandara, ball by ball, before springing the trap viral video

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.