பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதர் அசத்தல்; முதல் இன்னிங்ஸில் இலங்கை 265 ரன்கள் சேர்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்துள்ளது.

Indian team players rejoicing after taking a wicket.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள் - படம் | பிசிசிஐ

Published On :25 ஆகஸ்ட் 2026, 6:04 pm IST

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 503 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 8 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்த இலங்கை அணி, இன்று (ஆகஸ்ட் 25) மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் பசிந்து சூர்யபந்தாரா 133 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். கமிந்து மெண்டிஸ் 32 ரன்களும், கமில் மிஷாரா 19 ரன்களும் எடுத்தனர். ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடி வரும் சோனல் தினுஷா 85 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருடன் லகிரு குமாரா 8 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இந்தியா தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் மானவ் சுதர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இலங்கை அணி இந்தியாவைக் காட்டிலும் 238 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

In the second Test match against India, the Sri Lankan team has scored 265 runs for the loss of 8 wickets in the first innings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.