காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்னா!தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

மானவ் சுதருக்கு பிரபல தென்னாப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் பாராட்டு!

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் மானவ் சுதரை தென்னாப்பிரிக்க அணியின் பிரபல சுழற்பந்துவீச்சாளர் பாராட்டியுள்ளார்.

Manav Sudhar

மானவ் சுதர் - படம் | AP

Published On :

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் மானவ் சுதரை தென்னாப்பிரிக்க அணியின் பிரபல சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் பாராட்டியுள்ளார்.

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் நாளை (ஆகஸ்ட் 22) தொடங்குகிறது.

இந்த நிலையில், இந்திய அணி நிர்வாகம் மானவ் சுதர் என்ற மிகப் பெரிய திறமைசாலியை கண்டெடுத்துள்ளதாக தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேர்மையாகக் கூறவேண்டுமென்றால், நான் அதிகம் டெஸ்ட் போட்டிகள் பார்க்கவில்லை. ஆனால், சமூக ஊடகங்களில் வரும் ஹைலைட்ஸ் விடியோக்களை பார்த்தேன். மானவ் சுதர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பயணத்தை சரியாக தொடங்கியுள்ளதாக நினைக்கிறேன்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் பந்துவீசிய விதம் மிகவும் அற்புதமாக இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அடுத்த பத்தாண்டுகளுக்கு விளையாடும் திறமைவாய்ந்த மதிப்பு மிக்க வீரரை இந்திய அணி நிர்வாகம் கண்டெடுத்துள்ளது என்றார்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மானவ் சுதர் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதுவரை இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மானவ் சுதர், 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

A renowned South African spinner has praised Indian spinner Manav Suthar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.