தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!அருள் விக்னேஷ் மீது புகார் கொடுத்தது முதல்வருக்குத் தெரியுமா? தெரியாதா? மு.க. ஸ்டாலின் கேள்விகார்த்திகை தீபம்! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தாமிரக் கொப்பரை!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! விசாரணை நவ. 27-க்கு ஒத்திவைப்பு!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை!யாரையும் காப்பாற்ற முயற்சிக்காதீர்! எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கில் நீதிபதி கருத்து!ஆபாச குறுஞ்செய்தி: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வீட்டிற்கு போலீசார் வருகை!கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகாரில் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு! காவல்துறை பதில்!மதுரையில் 144 தடை! ஆட்சியர், காவல் துணை ஆணையர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (நவ. 24) பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டு காவலில் வைப்பு!‘கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றம்!இன்று டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசபரிமலை பம்பை நதியில் துணிகள், கழிவுகளை வீசினால் ரூ. 5,000 அபராதம்!வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்: 2.23 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

2-வது டெஸ்ட்: மிட்செல் ஸ்டார்க் அபார பந்துவீச்சு; 64 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Mitchell Starc

மிட்செல் ஸ்டார்க் - படம் | ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியா - வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஆகஸ்ட் 22) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, வங்கதேசம் முதலில் பேட் செய்தது.

மிட்செல் ஸ்டார்க் அபாரம்; 64 ரன்களில் ஆட்டமிழந்த வங்கதேசம்!

முதல் இன்னிங்ஸில் விளையாடிய வங்கதேசம் மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஷாத்மன் இஸ்லாமின் விக்கெட்டினை கைப்பற்றி அசத்தினார் மிட்செல் ஸ்டார்க். அதன் பின், தன்சித் ஹாசன் 0 ரன், கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 0 ரன், மோமினுல் ஹேக் 9 ரன்கள் என அடுத்தடுத்து அனைவரும் மிட்செல் ஸ்டார்க்கின் அபார பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். வங்கதேசம் 10 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

அதன் பின், முஷ்பிகர் ரஹீம் 5 ரன்கள், லிட்டன் தாஸ் 0 ரன், மெஹிதி ஹாசன் மிராஸ் 11 ரன்கள், ஹாசன் மஹ்முத் 10 ரன்கள், டஸ்கின் அகமது ஒரு ரன், ஷோரிஃபுல் இஸ்லாம் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். வங்கதேச அணியில் 7 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். அதில் 4 பேர் டக் அவுட்டாகி வெளியேறினர்.

அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 10 ஓவர்களில் 12 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அதில் 6 மெய்டன் ஓவர்கள் அடங்கும். பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹேசில்வுட் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலியா 101 ரன்கள் முன்னிலை!

வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 64 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் 22 ரன்கள், மாட் ரென்ஷா 8 ரன்கள் எடுத்தனர். மார்னஸ் லபுஷேன் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பின், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேமரூன் கிரீன் ஜோடி சேர்ந்தனர். இந்த இண நன்றாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருப்பினும், ஸ்டீவ் ஸ்மித் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய கேமரூன் கிரீன் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். அவர் 81 பந்துகளில் 51 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருடன் நாதன் லயன் 10 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

வங்கதேசம் தரப்பில் ஷோரிஃபுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டஸ்கின் அகமது மற்றும் மெஹிதி ஹாசன் மிராஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தைக் காட்டிலும் 101 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Summary

Batting first in the second Test match against Australia, Bangladesh was bowled out for 64 runs in the first innings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.