தமிழகத்தில் நாளைமுதல் பலத்த மழைக்கு வாய்ப்பு!100 நாள்களாகியும் முடித்து வைக்கப்படாத நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா்! புதிய சாதனை!சிந்து நதிநீா் ஒப்பந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை: இந்தியா திட்டவட்டம் 4,000 அக்னி வீரா்களின் தனிப்பட்ட தரவுகளை ‘டாா்க் வெப்’ தளத்தில் விற்க முயற்சி! 14 வயது சிறுவனிடம் விசாரணை!காலிஸ்தான் பிரிவினைவாதி பன்னூன் வழக்கு: அஜீத் தோவல், கோயலுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!மேல்மருவத்தூரில் 114 ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும்!நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 14 போ் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

720 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்தியா: வெளிநாட்டில் அதிகபட்ச ரன்கள் குவித்து சாதனை!

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி குறித்து...

Poster released by the BCCI

பிசிசிஐ வெளியிட்ட போஸ்டர் - படம்: எக்ஸ் / பிசிசிஐ

Updated On :

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 368 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 720 ரன்கள் எடுத்திருந்த வேளையில் டிக்ளேர் செய்தது. தற்போது, நியூசிலாந்து அணி இரண்டாம் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியில் கே.எல். ராகுல், ரிஷப் பந்த சதம் அடித்தார்கள். ஷுப்மன் கில் 98, தேவ்தத் படிக்கல் 80, துருவ் ஜுரெல் 78 ரன்கள் எடுத்தார்கள்.

நியூசிலாந்து சார்பில் க்ளென் பிலிப்ஸ் 3, ரச்சின் 2, டேரில் மிட்செல் தவிட மற்ற வீரர்கள் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

இரண்டாம் இன்னிங்ஸில் பேட்டிங் செய்துவரும் நியூசிலாந்து 35 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவைவிட நியூசிலாந்து 262 ரன்கள் பின் தங்கியுள்ளது.

இந்தியாவின் சார்பில் பும்ரா, பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்கள். களத்தில் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா விளையாடி வருகிறார்கள்.

வெளிநாட்டில் இந்தியாவின் அதிகபட்ச ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக இலங்கையில் 2010ல் 707 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்காக பிசிசிஐ போஸ்டர் வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.

Summary

India declares at 720 runs: Sets a record for the highest total scored on foreign soil!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.