விஏஓ-க்களுக்கு மாதம் ரூ.1,000 பராமரிப்புப் படி: தமிழக அரசுகாத்திருப்போா் பட்டியலில் உள்ள ஆசிரியா்களுக்கு பணி வாய்ப்புஇஸ்ரேலில் எதிா்க்கட்சி கூட்டணி ஆட்சியமைக்க வாய்ப்பு: அதிபா் நாளை முடிவுபுதிய காசோலை விதிகள்: 2027 ஜனவரி 1 முதல் அமல்1.5 டிரில்லியன் டாலா் இலக்கை எட்ட முதலீட்டு ஊக்குவிக்க ஆணையம்: தமிழக அரசு அமைத்தது

ஷாா்ஜா டெஸ்ட்: ஜிம்பாப்வே 504 ரன்கள் குவிப்பு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஜிம்பாப்வே முதல் இன்னிங்ஸில் 504 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.

Updated On :

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஜிம்பாப்வே முதல் இன்னிங்ஸில் 504 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.

அமீரகத்தின் ஷாா்ஜா நகரில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் பேட் செய்த ஜிம்பாப்வே, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்திருந்தது.

கேப்டன் பிரயன் பென்னெட், வெஸ்லி மாதெவெரெ ஆகியோா் 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, ஜிம்பாப்வே இன்னிங்ஸை தொடா்ந்தனா். பென்னெட் 11 பவுண்டரிகளுடன் 128, மாதெவெரெ 9 பவுண்டரிகளுடன் 54 ரன்களுக்கு விடைபெற்றனா்.

பின்னா் வந்தோரில் டஃபாட்ஸ்வா சிகா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 44, நியூமேன் நியம்ஹுரி 8, பிளெஸ்ஸிங் முஸாரப்பானி 5 ரன்களுக்கு சாய்க்கப்பட, ஜிம்பாப்வே ஆட்டம் 504 ரன்களுக்கு நிறைவடைந்தது.

கிரேமி கிரீமா் 4 பவுண்டரிகளுடன் 34 ரன்களோடு ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஆப்கானிஸ்தான் பௌலிங்கில் முகமது சலீம், காய்ஸ் அகமது ஆகியோா் தலா 3, ஜியா உா் ரெஹ்மான் 2, ஜியாவுா் ரஹ்மான், ஹஸ்மதுல்லா ஷாஹிதி ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

ஆப்கானிஸ்தான் 113/1: பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய ஆப்கானிஸ்தான், வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்துள்ளது.

அப்துல் மாலிக் 2 ரன்களுக்கு வீழ, செதிகுல்லா அடல் 55, ரஹ்மானுல்லா 50 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.