எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... தமிழ்நாட்டோடு தொடரும் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை! 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா 284 ரன்களுக்கு ஆட்டமிழப்பு; ஆஸி. 106 ரன்கள் முன்னிலை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

Australian players rejoicing after taking a wicket.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய வீரர்கள் - படம் | AP

Published On :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 390 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மாட் ரென்ஷா 190 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, பாட் கம்மின்ஸ் 43 ரன்கள், மார்னஸ் லபுஷேன் 37 ரன்கள், நாதன் லயன் 27 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 25 ரன்கள் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆன்ரிச் நோர்கியா இரண்டு விக்கெட்டுகளையும், சிமோன் ஹார்மர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

284 ரன்களுக்கு ஆட்டமிழந்த தென்னாப்பிரிக்கா!

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 390 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் பெடிங்ஹம் 73 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அய்டன் மார்க்ரம் 37 ரன்கள், சிமோன் ஹார்மர் 35* ரன்கள், கேசவ் மகாராஜ் 34 ரன்கள், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 32 ரன்கள் மற்றும் வியான் முல்டர் 30 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் நாதன் லயன் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பியூ வெப்ஸ்டர் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

106 ரன்கள் என்ற முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

Summary

In the first Test match against Australia, the South African team was bowled out for 284 runs in its first innings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER