நகைக் கடைகளில் இரவில் அதிக அளவில் பணத்தை இருப்பு வைத்திருக்க வேண்டாம்: சென்னை காவல் துறை அறிவுரைதொகுதி மறுசீரமைப்பு மசோதா: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியும் உள்ளடக்கம்!பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது மக்களவை! மக்களவையில் திமுக எம்.பி.க்களின் இருக்கைகள் மாற்றம்!

நியூசி.க்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்: 246 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா!

நியூசி.க்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 246 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது குறித்து...

துருவ் ஜுரெல் - படம் - பிசிசிஐ

Updated On :

நியூசி.க்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 246 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

கிறிஸ்ட்சர்ச் திடலில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டாம் பிளண்டெல் 89 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் ஆகாஷ் தீப் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் 357 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் பேட்டிங் ஆரம்பம் முதலே சொதப்பியது.

தேவ்தத் படிக்கல் 21 ரன்களிலும் கேப்டன் சுப்மன் கில் 17 ரன்களில் வெளியேற, கே.எல். ராகுல் 25 ரன்களுக்கு தன்னுடைய விக்கெட்டை இழந்தார்.

இருப்பினும், நிதானமாக விளையாடிய துருவ் ஜுரெல் இந்திய அணிக்காகப் போராடி 170 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தார்.

Summary

In the first innings of the second Test match against New Zealand, the Indian team lost all 10 wickets for 246 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.