
ஜார்க்கண்டில் விபத்து! அமைச்சரின் மகள் உள்பட 4 பள்ளி மாணவர்கள் பலி!
ஜார்க்கண்ட் விபத்தில் அமைச்சரின் மகள் உள்பட 4 மாணவர்கள் பலியானது பற்றி...

ஜார்க்கண்ட் கார் விபத்து - PTI
ஜார்க்கண்ட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் அம்மாநில அமைச்சர் தீபிகா பாண்டே சிங்கின் மகள் உள்பட 4 பேர் வியாழக்கிழமை அதிகாலை பலியாகினர்.
ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெத்பூர் அருகே வியாழக்கிழமை அதிகாலை அம்மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தீபிகா பாண்டே சிங்கின் மகள் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் காரில் பயணித்துள்ளனர்.
அதிகாலை 3 மணியளவில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில், காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதில், அமைச்சரின் மகள் த்ரிஷா சிங், சர்தக் அகர்வால், நமன் குப்தா மற்றும் வன்ஷிகா கண்டேல்வால் ஆகியோர் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் 4 பேரும் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ஆவர்.
உள்ளூர் மக்கள் அளித்த தகவலின்படி, புதன்கிழமை இரவு 10 மணி முதல் பழுதடைந்த கனரக லாரி ஒன்று சாலையின் நடுவே நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்புறம் பலமாக மோதி விபத்துக்குள்ளானது என்றனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் பதிவில், “சாலை விபத்தில் அமைச்சர் தீபிகா பாண்டே சிங்கின் மகள் மற்றும் பிறர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு நான் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன். ஒரு குழந்தையை இழக்கும் துயரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. எந்தவொரு பெற்றோருக்கும் அல்லது குடும்பத்திற்கும் இது தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாகும். மிகவும் கடினமான இத்தருணத்தில், சகோதரி தீபிகா மற்றும் துயருற்ற குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
à¤à¤®à¤¶à¥à¤¦à¤ªà¥à¤° मà¥à¤ à¤à¤¨à¤à¤ हाà¤à¤µà¥ पर हà¥à¤ सड़ठहादसॠमà¥à¤ राà¤à¥à¤¯ सरà¤à¤¾à¤° मà¥à¤ साथॠमà¤à¤¤à¥à¤°à¥ à¤à¤µà¤ बहन शà¥à¤°à¥à¤®à¤¤à¥ दà¥à¤ªà¤¿à¤à¤¾ पाà¤à¤¡à¥à¤¯ सिà¤à¤¹ à¤à¥ à¤à¥ बà¥à¤à¥ à¤à¤µà¤ à¤à¤¨à¥à¤¯ लà¥à¤à¥à¤ à¤à¥ निधन à¤à¥ बà¥à¤¹à¤¦ दà¥à¤à¤¦ à¤à¤° हà¥à¤¦à¤¯à¤µà¤¿à¤¦à¤¾à¤°à¤ à¤à¤¬à¤° सॠमन à¤à¤¤à¥à¤¯à¤à¤¤ वà¥à¤¯à¤¥à¤¿à¤¤ हà¥à¥¤
— Hemant Soren (@HemantSorenJMM) September 24, 2026
à¤à¤ªà¤¨à¥ सà¤à¤¤à¤¾à¤¨ à¤à¥ à¤à¥à¤¨à¥ à¤à¤¾ दà¥à¤à¤ à¤à¤¿à¤¸à¥ à¤à¥ माता-पिता à¤à¤° परिवार à¤à¥ लिठशबà¥à¤¦à¥à¤ सॠपरॠà¤à¤°â¦
Summary
Accident in Jharkhand - Four school students, including Minister's daughter killed
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






