வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

2 மாதத்துக்குள் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் மீண்டும் போராட்டம்! ஜார்க்கண்ட் அரசுக்கு மாணவர்கள் எச்சரிக்கை!

2 மாதத்துக்குள் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் இறங்குவோம் என ஜார்க்கண்ட் அரசுக்கு மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பற்றி...

News image

ஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள். - படம் - பிடிஐ

Updated On :19 ஆகஸ்ட் 2026, 5:37 pm IST

2 மாதத்துக்குள் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் இறங்குவோம் என ஜார்க்கண்ட் அரசுக்கு மாணவர்கள் புதன்கிழமை (ஆக.19) எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (பிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் தேர்வு, ஜேஎஸ்எஸ்சி உள்ளிட்ட தேர்வுகளில் வினாத்தாள்கள் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி, 3 வாரங்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், கடந்த 2014 ஆம் ஆண்டுமுதல் டிஎஸ்ஆர் டேட்டா பிராஸஸ்ஸிங் நிறுவனம் என்ற ஒப்பந்த நிறுவனம் மூலம், மாநிலத்தில் நடத்தப்பட்ட அனைத்து வேலைவாய்ப்புத் தேர்வுகள், ஜேஎஸ்எஸ்சி - சிஜிஎல் தேர்வு ஆகியவற்றை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். இதனால், மாணவர்கள் தங்களது போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்.

இதுகுறித்து மாணவர் தலைவர் ரவீந்திர பஸ்வான் இன்று பேசியதாவது:

அரசுப் பணியாளர் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததைக் கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் அதனைக் கைவிட்டதோடு, இந்தப் பிரச்னைகளை தீர்க்க ஜார்க்கண்ட் அரசுக்கு இரண்டு மாதங்கள் கால அவகாசம் கொடுத்துள்ளனர்.

ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் அரசை, 26 நாள்கள் மாணவர் போராட்டம், 22 தேர்வுகளை ரத்து செய்ய நிர்பந்தித்தது. இரண்டு மாதங்களுக்குள் இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணாவிட்டால், நாங்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்குவோம் என்று தெரிவித்தார்.

Summary

Students warned the Jharkhand government on Wednesday (August 19) that they would resume protests if the issue is not resolved within two months.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.