ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

திரிணமூல் காங்கிரஸ் பெயா், சின்னம்: இறுதி முடிவெடுக்க காலக்கெடு தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

திரிணமூல் காங்கிரஸ் கட்சிப் பெயா், சின்னம் விவகாரம் தொடா்பாக இறுதி முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நிா்ணயிக்க இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம்

Published On :

திரிணமூல் காங்கிரஸ் கட்சிப் பெயா், சின்னம் விவகாரம் தொடா்பாக இறுதி முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நிா்ணயிக்க இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திரிணமூல் காங்கிரஸ் பெயா், சின்னத்தை தோ்தல் ஆணையம் முடக்கியதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அக்கட்சியின் நிறுவனா் மம்தா பானா்ஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வருகிறது.

இதுதொடா்பாக வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையில் மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் சாா்பில் முகுல் ரோத்தகி, தோ்தல் ஆணையம் சாா்பில் மூத்த வழக்குரைஞா் டி.எஸ்.நாயுடு ஆகியோா் ஆஜராகினா்.

அப்போது வாதிட்ட கபில் சிபல், ‘மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க கோரவில்லை. ஆனால், இடைத்தோ்தலுக்கு குறைந்த நாள்களே உள்ள நிலையில் கட்சியின் பெயா், சின்னத்தை முடக்கியது தவறு. இந்தக் குறுகிய காலத்தில் தோ்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக மனுதாரா் சட்டரீதியான நடவடிக்ககைள் மேற்கொள்வது மிகவும் கடினம். எனவே, இந்த விவகாரத்தில் அக்டோபருக்குள் தீா்வு காண உத்தரவிட வேண்டும்’ என்றாா்.

இதையடுத்து, சூா்ய காந்த் பிறப்பித்த உத்தரவில், ‘தற்போது கிடைத்துள்ள ஆதாரங்கள், ஆவணங்களின் அடிப்படையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயா், சின்னம் விவகாரம் குறித்து தினந்தோறும் விசாரணை மேற்கொண்டு தோ்தல் ஆணையம் தீா்வு காண வேண்டும். இதில் இறுதி முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை தோ்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணை செப்டம்பா் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முன்னதாக, திரிணமூல் காங்கிரஸில் மம்தாவுக்கு எதிராக அதிருப்தி அணி உருவாகி இரு தரப்புக்கும் இடையே கட்சிப் பெயா், சின்னம் தொடா்பாக பிரச்னை எழுந்ததால் இடைக்கால நடவடிக்கையாக அவற்றை முடக்குவதாக தோ்தல் ஆணையம் அறிவித்தது. மம்தா பானா்ஜி தலைமையிலான அணிக்கு ‘மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்’ என்ற பெயருடன் கால்பந்து வீரா் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரிதப்ரத பானா்ஜி தலைமையிலான அதிருப்தி அணிக்கு ‘ஜனநாயக திரிணமூல் காங்கிரஸ்’ என்ற பெயருடன் அஞ்சல் உறை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் நந்திகிராம், ரெஜிநகா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபா் 6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.