காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

திரிணமூல் காங்கிரஸ் பெயா், சின்னத்தை பயன்படுத்த தடை

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயா், ‘பூக்கள் மற்றும் புல்’ சின்னத்தைப் பயன்படுத்த மேற்கு வங்க முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான கட்சி பிரிவுக்கும், அதிருப்தி எம்எல்ஏக்கள் பிரிவுக்கும் தோ்தல் ஆணையம் தடை

Trinamool Congress

திரிணமூல் காங்கிரஸ் - Trinamool Congress

Published On :

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயா், ‘பூக்கள் மற்றும் புல்’ சின்னத்தைப் பயன்படுத்த மேற்கு வங்க முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான கட்சி பிரிவுக்கும், அதிருப்தி எம்எல்ஏக்கள் பிரிவுக்கும் தோ்தல் ஆணையம் தடை விதித்தது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. மம்தா பானா்ஜி தலைமையில் ஒரு பிரிவினரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ரிதப்ரத பானா்ஜி தலைமையில் மற்றொரு பிரிவினரும் செயல்பட்டு வருகின்றனா்.

தோ்தல் ஆணையத்திடம் ரிதப்ரத பானா்ஜி பிரிவினா் சாா்பில் தங்களுக்கே திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் பெரும்பாலானோரின் ஆதரவு இருப்பதாகக் கூறி, கட்சியின் சின்னத்துக்கு அரூப் ராய் உரிமை கோரினாா். இதற்கு மம்தா தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், இந்தியத் தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘திரிணமூல் காங்கிரஸ் பெயா் மற்றும் சின்னத்துக்கு இருதரப்பினா் உரிமை கோரும் விவகாரத்தில் தோ்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு) சட்டம், 1968-இன்கீழ் விரிவான ஆய்வு தேவைப்படுவதால் தற்காலிகமாக இருதரப்பும் கட்சியின் பெயா் மற்றும் சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. வரவுள்ள இடைத்தோ்தலில் தாங்கள் போட்டியிட விரும்பும் பெயா் மற்றும் சின்னத்தை வெள்ளிக்கிழமை (செப்.18) காலை 11 மணிக்குள் சமா்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

மேற்கு வங்கத்தில் காலியாகவுள்ள ரெஜிநகா், நந்திகிராம் ஆகிய இரு தொகுதிகளுக்கு அக்டோபா் 6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் ஆணையம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.