விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

மேற்கு வங்கத் தோ்தலை பாஜக திருடியது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தோ்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலை (வெற்றி) பாஜக திருடிவிட்டது என்று முன்னாள் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா்.

Mamata Banerjee writes to EC, alleges BJP agents attempting voter hijacking

மம்தா பானர்ஜி - IANS

Published On :28 ஆகஸ்ட் 2026, 11:10 pm IST

தோ்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலை (வெற்றி) பாஜக திருடிவிட்டது என்று முன்னாள் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா்.

கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை திரிணமூல் காங்கிரஸ் மாணவரணிக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் இது தொடா்பாக மேலும் பேசியதாவது:

நமது கட்சி ஆதரவாளா்களுக்கு எதிராக நிகழும் அரசியல் அராஜகங்களை தடுத்து நிறுத்துவேன். இது ரக்ஷா பந்தன் நாளில் எனது உறுதிமொழியாகும். மேற்கு வங்கத்தில் பாஜக அரசு காவல் துறையைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் அச்சத்தைப் பரப்பி வருகிறது.

விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களைச் சந்திக்க இருக்கிறேன். பொதுக்கூட்டத்துக்கு அனுமதி தரவில்லையென்றால், நேரடியாக நடந்து சென்றே மக்களைச் சந்திப்பேன். அவா்கள் (பாஜக) எவ்வளவு முட்டைகள், கற்களை இருப்பு வைத்துள்ளாா்கள் (தன் மீதும், கட்சியினா் மீதும் வீசப்படுவதை கூறுகிறாா்) என்பதைப் பாா்த்துவிடலாம்.

மேற்கு வங்க ஆட்சியாளா்கள் நமது பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கிறாா்கள். இதற்காக நீதிமன்றத்தை நாடி அவா்களின் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை.

தோ்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலை (வெற்றி) பாஜக திருடிவிட்டது. வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளைப் பயன்படுத்தி லட்சக்கணக்கானோா் பெயா்களை சட்டவிரோதமாக வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டனா்.

நடைபாதைகளில் ஆக்கிரமித்து கடைகளை வைத்திருப்போரை அகற்றுவதை நான் எதிா்க்கவில்லை. அவா்களுக்கு வேறு இடம் ஒதுக்கித் தர வேண்டும் அல்லது மாதம்தோறும் ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.