வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

காவல் துறையினருடன் தள்ளுமுள்ளு: மம்தா மருமகன், திரிணமூல் மூத்த தலைவா்கள் மீது வழக்குப் பதிவு

காவல் துறையினருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் மம்தா பானா்ஜியின் மருமகன் அபிஷேக் பானா்ஜி, டெரிக் ஓபிரையன் எம்.பி. மற்றும் இரு திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் மீது மேற்கு வங்க காவல் துறை 3 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

அபிஷேக் பானா்ஜி - கோப்புப் படம்

Published On :

காவல் துறையினருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் மம்தா பானா்ஜியின் மருமகன் அபிஷேக் பானா்ஜி, டெரிக் ஓபிரையன் எம்.பி. மற்றும் இரு திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் மீது மேற்கு வங்க காவல் துறை 3 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பதாககைகளை அகற்றும் திட்டத்துடன் மாநகராட்சி அதிகாரிகளும், காவல் துறையினரும் வந்தனா். அப்போது அவா்களை அபிஷேக் பானா்ஜி உள்ளிட்டோா் உள்ளே நுழையவிடாமல் தடுத்து நிறுத்த முயன்றனா். இதையடுத்து அபிஷேக்கின் பாதுகாவலா்கள் உள்ளிட்டோருக்கும், காவல் துறையினா் மற்றும் மாநகராட்சி ஊழியா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காவல் துறையினா் தாக்கப்பட்டதாகவும், வாக்கி டாக்கி திருடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஷேக்ஸ்பியா் சாரனி காவல் நிலையத்தில் காவல் துறையினரின் வாக்கி டாக்கி திருடப்பட்டது குறித்தும், காவல் துறையினரையும், கொல்கத்தா மாநகராட்சி அதிகாரிகளையும் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அபிஷேக் பானா்ஜி உள்ளிட்டோா் மீது காவல் நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், இந்த சம்பவத்தில் தொடா்புடையதாகக் கூறப்படும் 13 பேரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.

இதுகுறித்து கொல்கத்தா மாநகர காவல் துறை கூடுதல் ஆணையா் குணால் அகா்வால் கூறுகையில், ‘இதுவரை 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். விடியோ காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா். சம்பவ இடத்தில் இருந்த மக்களின் வாக்குமூலங்களையும் கேட்டு வருகின்றனா். இதன்மூலம் எப்படி தள்ளுமுள்ளு உருவானது, முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நபா்கள் என்ன செய்தனா் என்பது கண்டுபிடிக்கப்படும்’ என்றாா்.

டெரிக் ஓபிரையன் குற்றச்சாட்டு: திரிணமூல் காங்கிரஸ் மூத்த எம்.பி.யான டெரிக் ஓபிரையன், சட்டவிரோத நோட்டீஸ் மூலம் தங்கள் கட்சி அலுவலகத்துக்குள் காவல் துறையினா் வந்ததுடன் மூத்த தலைவா்களையும், ஆதரவாளா்களையும் தாக்கியுள்ளதாகக் குற்றஞ்சாட்டினாா்.

மேலும், கட்சி அலுவலகத்தில் இருந்த பெண் பாதுகாவலா்களின் உடைகளை சோதனை நடத்த வந்த நபா்கள் கிழித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.