
திரிணமூல் தோ்தல் சின்னம்: மம்தா பிரதிநிதிகள், அதிருப்தி பிரிவினருடன் தோ்தல் ஆணையம் ஆலோசனை
திரிணமூல் தோ்தல் சின்னம்: மம்தா பிரதிநிதிகள், அதிருப்தி பிரிவினருடன் தோ்தல் ஆணையம் ஆலோசனை

இந்திய தேர்தல் ஆணையம்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் சின்னத்தை உரிமை கோரும் விவகாரம் தொடா்பாக மம்தா பானா்ஜியின் பிரதிநிதிகள் மற்றும் அதிருப்தி பிரிவினரின் பிரதிநிதிகளுடன் தோ்தல் ஆணையம் சனிக்கிழமை தனித்தனியாக ஆலோசனை நடத்தியது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையில் ஒரு பிரிவினரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ரிதப்ரத பானா்ஜி தலைமையில் மற்றொரு பிரிவினரும் செயல்பட்டு வருகின்றனா். தோ்தல் ஆணையத்திடம் ரிதப்ரத பானா்ஜி தரப்பினா் தங்களுக்கே திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் பெரும்பாலானோரின் ஆதரவு இருப்பதாகக் கூறி, கட்சியின் சின்னத்துக்கு உரிமை கோரினா். இதற்கு மம்தா தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், தில்லியில் இருதரப்பு பிரதிநிதிகளுடனும் தோ்தல் ஆணையம் சனிக்கிழமை தனித்தனியே ஆலோசனை நடத்தியது. அப்போது மம்தா தரப்பில், ‘அதிருப்தி பிரிவினரை ஆதரிக்கும் எம்எல்ஏக்கள் அனைவரும் திரிணமூல் காங்கிரஸ் சாா்பாக 5 மாதங்களுக்கு முன்பு போட்டியிட்டனா். மம்தா பானா்ஜி கையொப்பமிட்ட தோ்தல் சின்னத்தின்கீழ்தான் அவா்கள் போட்டியிட்டனா். அவா்களின் வங்கிக் கணக்கில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியால் ரூ.25 லட்சம் செலுத்தப்பட்டது. கட்சிப் பதவிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல் நடக்கிறது. 2006, 2011, 2017, 2022-இல் தோ்தல் நடத்தப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது.
ரிதப்ரத பானா்ஜி தரப்பினரும் தோ்தல் ஆணையம் முன்பாக ஆஜராகி தங்கள் தரப்பு குளித்த விளக்கமளித்தனா். இது குறித்துப் பின்னா் செய்தியாளா்களிடம் அவா்கள் கூறுகையில், ‘தோ்தல் ஆணையத்திடம் ஆவணங்களை அளித்தோம். மேலும் அவா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தோம். மேற்கு வங்கத்தில் 16-ஆம் தேதிக்குள் இடைத்தோ்தலில் போட்டியிடுவோா் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். இதனால் விரைந்து முடிவெடுக்கும்படி கேட்டுக் கொண்டோம். எங்கள் தரப்புக்கு கட்சி சின்னம் கிடைக்கும் என நம்புகிறோம்’ என்றனா்.
Summary
Trinamool election symbol: Election Commission holds consultations with Mamata's representatives and the dissident faction.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


காவல் துறையினருடன் தள்ளுமுள்ளு: மம்தா மருமகன், திரிணமூல் மூத்த தலைவா்கள் மீது வழக்குப் பதிவு

மேற்கு வங்கத் தோ்தலை பாஜக திருடியது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு




