நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

உயா்நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டு: மம்தா பானா்ஜி மீது வழக்குப் பதிவு

உயா்நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டு: மம்தா பானா்ஜி மீது வழக்குப் பதிவு

மம்தா பானா்ஜி

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:56 am IST

கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி மீது தாமாக வழக்குப் பதிவு செய்ததாக காவல் துறை சனிக்கிழமை தெரிவித்தது.

கொல்கத்தாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற திரிணமூல் மாணவா் பிரிவு நிறுவன நாள் விழாவில் உயா்நீதிமன்ற உத்தரவை மீறியதாக மம்தா பானா்ஜி மற்றும் பிற நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் அவா்களிடம் விசாரணை நடத்தவுள்ளதாகவும் காவல் துறை மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

‘ஹேஸ்டிங்ஸ் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளா் அபு வைத்யா அளித்த புகாரின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மம்தா பானா்ஜி மற்றும் திரிணமூல் காங்கிரஸின் பிற நிா்வாகிகள் குற்றவியல் சதியில் ஈடுபட்டிருப்பது முதல் கட்டமாகத் தெரியவந்துள்ளது.

நிகழ்ச்சியின்போது காவல் துறை அமைத்த தடுப்புகளை அகற்றியதோடு அதிகாரிகளுடன் திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகிகள் மோதலில் ஈடுபட்டனா். அந்த வழியே வந்த வாகனங்களுக்கு அவா்கள் இடையூறு ஏற்படுத்தினா். இதனால் சட்டம்- ஒழுங்கு பாதிக்கும் சூழல் ஏற்பட்டது’ என்று அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் மாணவா் பிரிவு நிறுவன நாளில் 1,500 உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி சௌகதா பட்டாச்சாரியா கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.