
ரயில் பயணத்தால் மனஉளைச்சல்! கசப்பான அனுபவத்தை பகிர்ந்த பாஜக எம்பியின் மனைவி!
பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவின் மனைவி சிவஸ்ரீ பகிர்ந்த கசப்பான ரயில் பயணம் பற்றி...

பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, சிவஸ்ரீ - x
ரயில் பயணத்தால் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளானதாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவின் மனைவியும் பாடகியுமான சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத், பாஜகவின் கர்நாடக எம்பி தேஜஸ்வி சூர்யாவை கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டார்.
கர்நாடக இசைப் பாடகர், பரதநாட்டியக் கலைஞர் எனப் பன்முகக் கலைஞராக விளங்கும் சிவஸ்ரீ, ரயில் பயணத்தின்போது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது:
”நான் இன்று மேற்கொண்ட ரயில் பயணம் மிகவும் மன உளைச்சலைத் தருவதாக அமைந்தது. பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது மக்களுக்கு தெரியவில்லை என்பதைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது. பொது இடங்களில் இருக்கும்போது, நாம் சப்தமாக அல்லது உரத்த குரலில் பேசி மற்றவர்களின் தனிப்பட்ட அமைதியைக் குலைக்கவோ கூடாது.
கலைஞர்களாகிய எங்களுக்குள் எப்போதும் பல சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கும்; நாங்கள் அமைதியான சூழலிலேயே சிறப்பாகச் செயல்படுவோம்.
ஒரு பெரிய குழுவாக ரயிலில் பயணிக்கும்போது ஏற்படும் உற்சாகத்தை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், 56 இருக்கைகள் கொண்ட ஒரு பெட்டியில் 40 நடுத்தர வயதுடையவர்கள் அமர்ந்து கொண்டு, 5 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் சப்தமான குரலில் பேசிக்கொண்டிருப்பதை கற்பனை செய்து பாருங்கள்.
இந்தியாவில் உள்ள பிரச்னை என்னவென்றால், அவர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. அந்தக் குழுவைச் சாராத மற்ற 16 பேரும் (என்னையும் சேர்த்து) அந்தச் சூழலைச் சகித்துக்கொண்டுதான் ஆக வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதியாக உள்ளது.
அதனால், வேறொரு பெட்டியில் எனக்கு இருக்கை கிடைக்குமா என்று ரயில் டிக்கெட் பரிசோதகரிடம்கேட்டேன். அவர் முயன்றார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரயில் இருக்கைகள் முழுவதுமாக நிரம்பியிருந்ததால், அதே பெட்டியில் வேறொரு இருக்கைக்கு மாற வேண்டியதாயிற்று. திடீரென்று, ஏற்கெனவே இடைவிடாமல் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்த 8 பேர் கொண்ட ஒரு குழு 'யுனோ' விளையாட்டை விளையாடத் தொடங்கினர்.
அப்போது மீண்டும் அந்த அதிகாரியிடம் ஏதேனும் செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர் அவர்களை நிறுத்தச் சொன்னார், அவர்களும் உடனடியாக நிறுத்தினர். ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த அதிகாரி மீண்டும் வந்து, "ஏன் சார் இவ்வளவு சப்தம் போடுகிறீர்கள்?" என்று கிண்டலாகக் கேட்டார். அதற்கு அவர்கள் அவருடன் சேர்ந்து சிரித்துக்கொண்டே, "சார், நீங்களும் வந்து எங்களுடன் விளையாடுங்கள்" என்று கூறினர்.
இங்கே பிரச்னை யார் வெற்றி பெற்றார்கள் என்பது அல்ல. பொது இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற நற்பண்பில் இந்தியர்களாகிய நாம் தோற்றுவிட்டோம். ஒரு தேசமாக நாம் எப்போது பொது இடத்தில் நடந்துகொள்ளும் அறிவை மேம்படுத்திக்கொள்ளப் போகிறோம்?
அதன் பிறகு, அவர்கள் வேண்டுமென்றே பாலிவுட் பாடல்களை ஒலிக்கவிடத் தொடங்கினார்கள். இந்தக் நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் பதிவுக்கு ஆதரவு தெரிவித்து, பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
I had a traumatic train ride today. It is very sad to see how people do not respect public spaces enough. When we are in the public, we should not shout or even talk loudly and disrespect every individualâs personal space in Public. As artists, we have a 100 thoughts running. Andâ¦
— Sivasri Skandaprasad ð®ð³ (@ArtSivasri) September 24, 2026
Summary
Train journey causes traumatic! BJP MP's wife Sivasri Skandaprasad shares bitter experience!

தேர்தல் வந்ததும் தொல்லை கொடுக்கத் தொடங்கிவிடுகிறீர்கள்! தேர்தல் ஆணையம் குறித்து நீதிமன்றம் விமர்சனம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





