
தில்லியில் 21 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன 15 வயது சிறுவன் காசியாபாத்தில் கண்டுபிடிப்பு
தில்லியில் 21 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன 15 வயது சிறுவன் காசியாபாத்தில் கண்டுபிடிக்கப்பட்டது பற்றி...

தில்லியில் 21 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன 15 வயது சிறுவன் காசியாபாத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.
தலைநகர் தில்லியில் பெற்றோருடன் படிப்பு விஷயமாக ஏற்பட்ட தகராறினை அடுத்து வீட்டை விட்டு வெளியேறிய 15 வயது சிறுவன், சுமார் 21 மாதங்களுக்குப் பிறகு காசியாபாத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
டோடாபூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனை பள்ளிக்குச் சென்று படிப்பில் கவனம் செலுத்துமாறு பெற்றோர் வலியுறுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறியுள்ளான்.
ஆனால், அவன் அவ்வாறு செய்வதில் விருப்பம் இல்லாமல் இருந்ததாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த 2024 டிசம்பர் 25ஆம் தேதி சிறுவன் காணாமல் போனதைத் தொடர்ந்து, ராஜீந்தர் நகர் காவல் நிலையத்தில் ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தில்லி-என்சிஆர் முழுவதும் சுமார் 153 சிசிடிவி கேமராக்கள், 24 காப்பகங்கள் மற்றும் 27 அனாதை இல்லங்கள் மற்றும் பல வழிபாட்டுத் தலங்களை போலீஸார் சோதனை செய்தனர்.
ஆனால் ஆரம்பத்தில் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. பின்னர், அச்சிறுவன் சமீபத்தில் காசியாபாத்தில் காணப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் மூலம் போலீஸ் குழுவிற்குத் தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீஸ் குழுவினர், உள்ளூர் மக்களிடம் அவனது புகைப்படங்களைக் காண்பித்து, செப்டம்பர் 25ஆம் தேதி சிறுவனைக் கண்டுபிடித்தனர்.
சிறுவன் ராஜீந்தர் நகர் காவல் நிலையத்திற்குக் அழைத்துவரப்பட்டு, அவனது தாயார் அடையாளம் கண்டதை அடுத்து விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
Summary
A 15-year-old boy who allegedly left his Delhi home following a dispute with his parents over his studies was traced in Ghaziabad after nearly 21 months, police said on Sunday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






