
உச்ச நீதிமன்றத்தில் இன்று (செப். 28) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை(செப்.28) விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள் குறித்து....

உச்ச நீதிமன்றத்தில் இன்று (செப். 28) எந்தெந்த வழக்குகள் விசாரணை? - உச்ச நீதிமன்றம்
புதுதில்லி: டிஜிட்டல் மோசடிகள், குறிப்பாக டிஜிட்டல் கைதுகள் தொடர்பான தாமாக முன்வந்து தொடரப்பட்ட வழக்கு, தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (செப். 28) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன.
உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்:
* ரூ. 2,000-க்கு மேற்பட்ட குறிப்பிட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்காகப் முன்மொழியப்பட்டுள்ள மெர்ச்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட்(எம்டிஆர்) விதிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்துத் தொடரப்பட்ட மனு.
* திரிணாமுல் காங்கிரஸின் பெயர் மற்றும் கட்சிச் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
* 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கட்டாயம் என்ற சிபிஎஸ்இ-ன் சுற்றறிக்கைகளுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் மேற்கொள்ளவுள்ளது.
* மணிப்பூர் இன வன்முறை தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
* டிஜிட்டல் மோசடிகள், குறிப்பாக டிஜிட்டல் கைதுகள் தொடர்பான தாமாக முன்வந்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
* திருமண வழக்கு ஒன்றில், கிரிக்கெட் வீரர் முகமது ஷாமியை பிரிந்து வாழும் மனைவி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது.
Summary
SC to hear a plea challenging the Centre's decision to impose a MDR on specified UPI person-to-merchant transactions of over Rs 2,000.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





