ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைவுகாந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்தி

ஜனநாயகத்தின் அடித்தளமே ஆபத்தில் இருப்பதாக ராகுல் காந்தி பதிவு...

rahul gandhi

ராகுல் காந்தி - INC

Published On :

ஜனநாயகத்தின் அடித்தளமே ஆபத்தில் இருப்பதாகவும், முழு வலிமையுடனும் அதைப் பாதுகாப்போம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிப்பட்டமுறையில் முடிவெடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவது குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கூடியுள்ளது.

இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி தெரிவித்திருப்பதாவது:

”தில்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் மூத்த தலைவர்களுடன் நானும் பங்கேற்றேன்.

ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாப்பது குறித்து இக்கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. வாக்குரிமை என்பது நமது ஜனநாயகப் போராட்டத்தின் ஒரு முக்கிய சாதனையாகும்; அது ஒவ்வொரு குடிமகனின் மிக முக்கியமான உரிமையாகும்.

ஆனால் இன்று, தேர்தல் ஆணையம் மற்றும் பாஜகவின் கூட்டுச் சதியால், கோடிக்கணக்கான இந்தியர்களின் வாக்குகளும், அத்துடன் நமது ஜனநாயகத்தின் அடித்தளமே ஆபத்துக்குள்ளாகியுள்ளது. ஜனநாயகக் கடமையாகத் திகழும் நியாயமான தேர்தல் மற்றும் வாக்குரிமை முறையைச் சீர்குலைக்க அவர்கள் முயற்சிக்கின்றனர்.

எங்கள் கடமையை நிறைவேற்றும் வகையில், முழு வலிமையுடனும் அதைப் பாதுகாப்போம். அது சிதைந்துபோக ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Democracy is in danger; let us protect it with full strength! – Rahul Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.