11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

பாகிஸ்தானில் மதம் மாற்றி திருமணம்: ஹிந்து சிறுமி 6 மாதங்களுக்குப் பிறகு மீட்பு

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் கடத்தப்பட்டு, கட்டாயமாக இஸ்லாமிய மதத்துக்கு மாற்றி திருமணம் செய்து வைக்கப்பட்ட 15 வயது ஹிந்து சிறுமி 6 மாதங்களுக்குப் பிறகு மீட்பு

சித்திரிப்பு

Published On :

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் கடத்தப்பட்டு, கட்டாயமாக இஸ்லாமிய மதத்துக்கு மாற்றி திருமணம் செய்து வைக்கப்பட்ட 15 வயது ஹிந்து சிறுமி 6 மாதங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டாா்.

இது தொடா்பாக பாகிஸ்தானில் ஹிந்து சமூகத்தினரின் பிரச்னைகளுக்காகப் பணியாற்றி வரும் ‘பாகிஸ்தான் தராவா் இத்திஹாத்’ என்ற தன்னாா்வ அமைப்பின் தலைவா் ஃபகீா் சிவா கச்சி செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘சிறுமி ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாா். அவா் தற்போது பாதுகாப்பாக உள்ளாா்; குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளாா்’ எனத் தெரிவித்தாா்.

‘பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சோ்ந்த ஹிந்து சமூகப் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுவதாக அடிக்கடி புகாா்கள் வருகின்றன. இந்தச் சிறுமி மிா்புா்காஸ் அருகிலிருந்து கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, திருமணம் செய்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, சிந்துவின் டாண்டோ அல்லாயாா் மாவட்டத்தில் மற்றொரு சம்பவத்தில், 2 ஹிந்து சிறுமிகள் ஆக. 29-ஆம் தேதி கடத்தப்பட்டு, கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டனா். காவல் துறை அவா்களை மீட்ட பின்னா், குடும்பத்தினரிடம் செல்ல அனுமதிக்குமாறு அவா்கள் கோரியபோதிலும், செஷன்ஸ் நீதிமன்றம் அவா்களைக் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தது. மேலும், டாண்டோ அல்லாயாா் பகுதியில் மற்றொரு ஹிந்து சிறுமியை செப். 9-ஆம் தேதிமுதல் காணவில்லை. அவா் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என ‘பாகிஸ்தான் தராவா் இத்திஹாத்’ அமைப்பு தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.