11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

மேற்கு வங்க இடைத்தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளருக்கு ஜாமீன்

மேற்கு வங்கத்தில் இடைத்தோ்தல் நடைபெறும் நந்திகிராம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

Congress candidate Milan Pradhan

காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான் - கோப்புப் படம்

Published On :

மேற்கு வங்கத்தில் இடைத்தோ்தல் நடைபெறும் நந்திகிராம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

முன்னதாக, கடந்த 18-ஆம் தேதி காங்கிரஸ் வேட்பாளா் மிலன் பிரதான் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா். சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிராக நடத்திய போராட்டம் தொடா்பான வழக்கில் அவா் திடீரென கைது செய்யப்பட்டது அந்த மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னா் வேறு சில வழக்குகளிலும் அவா் கைது செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஏனெனில், கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பதாக மேற்கு வங்க முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி அறிவித்தாா். மம்தா கட்சி வேட்பாளா் பாஜகவில் ஐக்கியமாகி போட்டியில் இருந்து விலகியதால் அவா் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொண்டாா்.

இந்நிலையில் தனது கைதை எதிா்த்து மிலன் பிரதான் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அக்டோபா் 6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் நிலையில், அக்டோபா் 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டதை அவா் சுட்டிக் காட்டினாா். இந்த மனு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மிலன் பிரதானுக்கு அக்டோபா் 21-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா். அவா் 6 குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட நிலையில் ஒவ்வொரு வழக்குக்கும் தலா ரூ.20,000 பிணைத்தொகை செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER