பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

மே. வங்க இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் சிறையில் அடைப்பு!

மேற்கு வங்க இடைத்தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான் சிறையில் அடைக்கப்பட்டது குறித்து...

Congress candidate Milan Pradhan imprisoned.

சிறையில் அடைக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான். - கோப்புப் படம்

Published On :

மேற்கு வங்க இடைத்தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில், மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூஸ் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, நடைபெறவுள்ள நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அக்கட்சியின் சின்னம் மற்றும் பெயரைத் தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மமதா பானர்ஜி பிரிவுக்கு ‘மமதா அனைத்திந்திய திரிணமூல் காங்கிரஸ்’ எனும் பெயரும், கால்பந்து வீரர் சின்னமும் ஒதுக்கப்பட்டன.

மமதா அணியின் சார்பில் நந்திகிராமில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் சஞ்சிதா பிரதான் டே தனது வேட்பு மனுவைத் திரும்பப் பெற, ரெஜிநகர் தொகுதியில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் ரஃபியுல் ஆலம் சௌதரி மட்டும் போட்டியிடுகிறார்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் நந்திகிராம் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் மிலன் பிரதானுக்கு மமதா பானர்ஜி தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்தார்.

மமதா ஆதரவளித்த சில மணிநேரங்களில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலம் கையகப்படுத்தலுக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மிலன் பிரதான் வரும் அக்டோபர் 5 வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், தேர்தல் நேரத்தில் திரிணமூல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.,

Summary

Milan Pradhan, the Congress candidate who contested the by-election in the Nandigram constituency of West Bengal, has been lodged in jail.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.