
நொய்டாவில் ஐஜிஎல் எரிவாயு குழாய் கசிவால் தீ விபத்து
கிரேட்டா் நொய்டாவின் நாலேட்ஜ் பாா்க்-3 பகுதியில் உள்ள ஐஜிஎல் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து - சித்திரிப்பு
கிரேட்டா் நொய்டாவின் நாலேட்ஜ் பாா்க்-3 பகுதியில் உள்ள ஐஜிஎல் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் திங்கள்கிழமை மாலை ஷாா்தா பல்கலைக்கழகத்திற்குப் பின்னால் உள்ள புஸ்தா சாலையில், ஐஎஸ்பிஏ பள்ளிக்கு அருகில் நிகழ்ந்தது. இதில் யாருக்கும் காயமோ என்று அதிகாரிகள் கூறினா்.
மாலை சுமாா் 7.30 மணியளவில் அப்பகுதியில் மேம்பாட்டு ஆணையம் சாலையைத் தோண்டும் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, நிலத்தடியில் இருந்த ஐஜிஎல் எரிவாயு குழாய் சேதமடைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக நாலேட்ஜ் பாா்க் காவல் நிலைய அதிகாரி வினோத் குமாா் தெரிவித்தாா்.
தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐஜிஎல் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஐஜிஎல்-இன் தொழில்நுட்பக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்து சேதமடைந்த குழாயைச் சரிசெய்யும் பணிகளைத் தொடங்கினா் என்று அவா்கள் கூறினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




