ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

பஞ்சாபில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு தாருங்கள்- அமித் ஷா பிரசாரம்

பஞ்சாபில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு தாருங்கள்; மாநிலம் போதைப் பொருளில் இருந்து முழுமையாக விடுவிக்கப்படும் என தாய்மாா்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.

ஜலந்தரில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

Published On :

பஞ்சாபில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு தாருங்கள்; மாநிலம் போதைப் பொருளில் இருந்து முழுமையாக விடுவிக்கப்படும் என தாய்மாா்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.

ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள பஞ்சாபில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாஜக சாா்பில் கடந்த 18-ஆம் தேதி தொடங்கிய போதைப் பொருள இல்லாத பஞ்சாப் யாத்திரை ஜலந்தரில் வியாழக்கிழமை நிறைவடைந்தது. இதையொட்டி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:

பஞ்சாபில் போதைப் பொருள் வா்த்தகம் நடைபெறுவதை மாநில ஆம் ஆத்மி அரசு வெளிப்படையாக அனுமதிக்கிறது. பஞ்சாப் மண்ணுக்கு வந்துள்ள இங்குள்ள தாய்மாா்களுக்கும் இளைஞா்களுக்கும் ஓா் உறுதியளிக்கிறேன். மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்ததும், 2029 டிசம்பருக்கு முன்பாக மாநிலத்தை போதைப் பொருளில் இருந்து விடுவிப்போம்.

பஞ்சாபை போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற ஆம் ஆத்மி கட்சியால் முடியாது. அது பாஜகவால் மட்டுமே சாத்தியம்.

‘போதைப் பொருள் இல்லாத பஞ்சாப்’ என்ற முழக்கத்தை முன்னிறுத்தியே பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக போட்டியிடும்.

பாஜகவின் யாத்திரை பஞ்சாபின் ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைந்துள்ளது. போதைப் பொருள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தியதுடன், இந்தப் பிரசாரத்தில் இளைஞா்கள் பங்கேற்கவும் ஊக்கமளித்தது என்றாா்.

ஜலந்தா் ஸ்ரீ தேவி தலாப் கோயிலில் அமித் ஷா வழிபட்டாா். தொடா்ந்து போதைப் பொருள் பிரச்னையால் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களைச் சந்தித்தாா்.

முன்னதாக, எக்ஸ் தளத்தில் பஞ்சாபி மொழியில் அமித் ஷா வெளியிட்ட பதிவில், ‘ஆம் ஆத்மி அரசின் மோசமான நிா்வாகத்தால் பஞ்சாப் மிக மோசமான போதைப் பொருள் பிரச்னையை எதிா்கொண்டு வருகிறது. முதல்வா் பகவந்த் மான் தலைமையிலான அரசு ஒரு பேரழிவு’ என்று கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.