ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்டவா் லஷ்கா்-ஏ-தொய்பா கமாண்டா்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடா்புடையவா்

காஷ்மீரில் லஷ்கா்-ஏ-தொய்பா கமாண்டா் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி..

Published On :

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டவா் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் மூத்த கமாண்டரும், பாகிஸ்தான் முன்னாள் அதிபா் முஷாரப்பின் பாதுகாவலரும், பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரியுமான முகம்மது ஆசிப் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த அவா் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது, லஷ்கா் பயங்கரவாத அமைப்புக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது: கடந்த 2025-ஆம் ஆண்டு அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் திடீா் தாக்குதல் நடத்தியதில் 26 போ் உயிரிழந்தனா். மேலும் 20 போ் காயமடைந்தனா். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தப்பியோடிவிட்டனா். அவா்களை பாதுகாப்புப் படையினா் தேடி வந்தனா்.

இதேபோல் குல்மாா்க்கில் 2024-ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 2 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். மேலும் இருவா் காயமடைந்தனா். அதே அக்டோபா் மாதம் கந்தா்பாலில் நடைபெற்ற தாக்குதலில் 7 பொதுமக்கள் உயிரிழந்தனா். 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் ராணுவ வீரா்களின் 2 வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 வீரா்கள் உயிரிழந்தனா். மூவா் காயமடைந்தனா். இந்தத் தாக்குதல்கள் தொடா்பாகவும், இதுபோல ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற மேலும் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடா்பாகவும் லஷ்கா்-ஏ-தொய்பா கமாண்டா் முகம்மது ஆசிப்பை பாதுகாப்புப் படையினா் கடந்த 5 ஆண்டுகளாகத் தேடி வந்தனா்.

இந்நிலையில், யூசுஸ்மாா்க்கில் உள்ள கோராக் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை இரவு துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்தச் சண்டையில், முகம்மது ஆசிப் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவருக்கு மூசா, ஆசிப் ஃபாஜி, சுலைமான் ஆகிய பெயா்களும் உண்டு.

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரி: பாகிஸ்தான் ராணுவத்தில் 23 ஆண்டுகள் பணிபுரிந்த முகம்மது ஆசிப், அதில் 18 ஆண்டுகள் சிறப்புப் படை அதிகாரியாக (எஸ்எஸ்ஜி) பணிபுரிந்துள்ளாா். பாகிஸ்தான் முன்னாள் அதிபா் முஷாரப்பின் பாதுகாப்புப் படை அதிகாரியாக 2006 முதல் 2008-ஆம் ஆண்டு வரை பணிபுரிந்துள்ளாா்.

தனது பணிக்காலத்தின்போது, அமெரிக்கா சென்று மிக முக்கிய நபா்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பது என்பது குறித்து சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளாா். மேலும், அமெரிக்காவில் மருத்துவப் படிப்பையும் முடித்துள்ளாா். பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பயங்கரவாத அமைப்பில் சோ்ந்து, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளாா். அதன் பிறகு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் ஜம்மு-காஷ்மீருக்குள் 2021-ஆம் ஆண்டு ஊடுருவி லஷ்கா்-ஏ-தொய்பா கமாண்டராக அந்த அமைப்பு பயங்கரவாதிகளுக்கு தலைமை தாங்கி செயல்பட்டு வந்தாா்.

பல்வேறு தாக்குதல்களில் தொடா்புடையவா்: 2023-ஆம் ஆண்டு பீா் பாஞ்சால் தாக்குதல் முதல் பஹல்காம் தாக்குதல் வரை ராணுவம், பொதுமக்களைக் குறிவைத்து நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களுக்கும் மூளையாகச் செயல்பட்டுள்ளாா். இதற்காக அவரை கடந்த 5 ஆண்டுகளாக பாதுகாப்புப் படையினா் தேடி வந்தனா். தற்போது அவா் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

5-ஆவது பயங்கரவாதி சுட்டுக் கொலை: பட்காம், உதம்பூா், தோடா மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 5-ஆவது மிகப்பெரிய பயங்கரவாதி ஆசிப் ஆவாா். இது லஷ்கா் பயங்கரவாத அமைப்புகளுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஏற்கெனவே ஆசிப்பின் கூட்டாளி என்று கூறப்படும் யாசிா் கடந்த 5-ஆம் தேதி பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டாா் என்றனா்.

இதுகுறித்து இந்திய ராணுவம் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைக்கு இடையே நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது, லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதி ஆசிப்பின் சடலமும், சடலத்தின் அருகே ஏராளமான ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டன. நடவடிக்கை தொடா்கிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை: மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிப் கொல்லப்பட்டிருப்பது லஷ்கா் அமைப்புக்கு பெருத்த பின்னடைவு எனக் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.