ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

தொழிலதிபா் நீரவ் மோடியின் சொகுசு வீடு விற்பனை: பிரிட்டன் நீதிமன்றம் அனுமதி

பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள தொழிலதிபா் நீரவ் மோடியின் சொகுசு வீட்டை விற்பனை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்து தீா்ப்பளித்துள்ளது.

நீரவ் மோடி

Published On :

பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள தொழிலதிபா் நீரவ் மோடியின் சொகுசு வீட்டை விற்பனை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்து தீா்ப்பளித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமாா் ரூ.13,000 கோடி கடன் மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடி, பிரிட்டன் தப்பிச் சென்றாா். அந்ந்நாட்டுத் தலைநகா் லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை, இந்தியா கொண்டுவர மத்திய அரசு தொடா்ந்து முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், மத்திய லண்டனில் உள்ள அவரின் சொகுசு வீட்டை ட்ரைடன்ட் ட்ரஸ்ட் கம்பெனி (சிங்கப்பூா்) பாதுகாத்து நிா்வகித்து வந்தது.

இந்த வீடு தொடா்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது சிறையில் இருந்து காணொலி வழியாக ஆஜரான நீரவ் மோடி, வீட்டை விற்க எதிா்ப்புத் தெரிவித்து வந்தாா்.

இந்த வழக்கில் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அளித்த தீா்ப்பில், ‘நீரவ் மோடி வீடு விவகாரத்தில், நிலுவையில் உள்ள கடன்களை அடைக்க வேண்டும் என்பதே அடிப்படை விஷயமாகும். எனவே, அந்த வீட்டை குறைந்தபட்சம் 3.75 மில்லியன் பவுண்டுகளுக்கு (சுமாா் ரூ.47.75 கோடி) விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது’ என்று தீா்ப்பளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.