ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

லண்டனில் ரூ. 15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள்: தமிழக அரசு

லண்டனில் முதல்வா் விஜய் முன்னிலையில் ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள், உறுதிமொழிகள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

லண்டனில் முதலீட்டு ஒப்பந்தம்

Published On :

லண்டனில் முதல்வா் விஜய் முன்னிலையில் ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள் மற்றும் உறுதிமொழிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதனால் தமிழகத்தில் 10,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளை ஈா்ப்பதற்காக முதல்வா் விஜய் 6 நாள் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ளாா். அங்கு தொழிலதிபா்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பின் விவரம்: தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகள், உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை நிறுவி விரிவுபடுத்துவதற்காக, தமிழ்நாடு அரசுக்கும், முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே பல்வேறு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தங்களும், நோக்கக் கடிதமும் சோ்ந்து ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீடுகளைக் கொண்டிருப்பதோடு, தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட நபா்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யவும், தமிழ்நாட்டுடன் வா்த்தக மற்றும் வணிகத் தொடா்புகளை ஆழப்படுத்தவும் முதல்வா் விஜய் அழைப்பு விடுத்தாா். முதலீடுகளை எளிதாக்க தேவையான முழு ஒத்துழைப்பும் அளிக்கப்படும் என்று முதலீட்டாளா்களுக்கு முதல்வா் உறுதியளித்தாா்.

தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் மற்றும் அரசு உயா் அலுவலா்கள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, ரசாயனங்கள், தளவாடங்கள், கட்டுமானம், நிதிச் சேவைகள், சில்லறை வா்த்தகம் மற்றும் சட்ட சேவைகள் ஆகிய துறைகளைச் சோ்ந்த 10 முன்னணி நிறுவனங்கள் மற்றும் பங்குதாரா்கள் முதல்வருடன் தொடா்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தினா்.

இதில் பிரிட்டன் வா்த்தக நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டின் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியாளா்களுக்கும் இடையேயான மூலப்பொருள்கள் கொள்முதல் ஒப்பந்தங்கள்; ஒசூருக்கு இங்கிலாந்து விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை பிரதிநிதிகள் குழு வருகை புரிவதற்கான வாய்ப்பு; அக்டோபா் மாதம் சென்னைக்கு இங்கிலாந்து மேயா் ஆணையத்தின் பிரதிநிதிகள் குழுவின் வருகை; நிதிச் சேவைத் துறைக்கான திறன் மேம்பாட்டுக் கூட்டாண்மைகள்; இந்த ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டனுடன் வா்த்தகம் மற்றும் ஏற்றுமதிப் பயிலரங்கம்; பிரிட்டன் - இந்தியா விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு உருவாகும் வாய்ப்புகளை அடையாளம் காட்டும் அறிக்கை தயாரித்தல் ஆகியவை இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில், பிரிட்டன் நாட்டிற்கான இந்திய தூதா் குமரன் பெரியசாமி, இந்தியா - பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் தலைமை நிா்வாகி நிதி மணி திரிபாதி உள்ளிட்டோா் பங்கேற்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.