தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!தில்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டம் தொடங்கியது! 19 கட்சிகள் பங்கேற்பு!துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

ரூ. 3 லட்சம் கோடி ஊழல்! ரூ. 4 கோடியிலிருந்து ரூ. 1,413 கோடியாக உயர்ந்த டி.கே. சிவகுமார் சொத்து!

மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமி முன்வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டு பற்றி...

DK Shivakumar

டி.கே. சிவகுமார் - Photo | Express

Published On :

பெங்களூரு - மைசூரு உள்கட்டமைப்பு வழித்தட திட்டத்தில் ரூ. 3 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

இதுதான் நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் என்றும், 2ஜி மற்றும் நிலக்கரி ஊழல்களைவிட மிகப்பெரியது என்றும் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமி, பெங்களூரு - மைசூரு உள்கட்டமைப்பு வழித்தட திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது:

“1995-ஆம் ஆண்டில் தேவே கௌடா முதலமைச்சராக இருந்தபோது பெங்களூரு - மைசூரு உள்கட்டமைப்பு வழித்தடத்துக்கான முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் அரசு முகமைகளுடன்தான் போடப்பட்டது. நந்தி உள்கட்டமைப்பு காரிடார் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் அல்ல.

தொடக்கத்தில், தனியார் கட்டுமான நிறுவனம், கட்டுமானம் மற்றும் நிலம் கையகப்படுத்தும் செலவுகளை ஏற்க வேண்டும் என்றும், சுங்கக் கட்டணம் வசூலித்தல் மற்றும் நகரங்களை மேம்படுத்துவதன் மூலம் முதலீட்டை மீட்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.

2004-ஆம் ஆண்டில் அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமலேயே பெங்களூரு - மைசூரு வழித்தட திட்டத்தை அப்போது நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த டி.கே. சிவகுமார் மாற்றினார். அப்போது ஒரு ஒப்பந்தத்தின் மூலம் நந்தி உள்கட்டமைப்பு காரிடார் எண்டர்பிரைசஸ் நிறுவனம் திட்டத்துக்குள் நுழைந்தது.

திட்டம் மாற்றியமைக்கப்பட்ட பின்னர், முன்னதாக கைப்பற்றப்பட்ட நிலங்கள் விற்கப்பட்டன. சிவகுமார் மற்றும் அவரது சகோதரரும் முன்னாள் எம்பியுமான டி.கே. சுரேஷ் தொடர்புடைய சொத்துகளில் 10 ஏக்கர் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டு, பின்னர் விற்பனை செய்யப்பட்ட நிலங்கள். நிலப் பதிவேடுகளில் முறைகேடும், ஆக்கிரமிப்புகளும் நடந்துள்ளன.

2004-ல் ரூ. 4 கோடியாக இருந்த சிவகுமாரின் சொத்து மதிப்பு, 2023-ல் ரூ. 1,413 கோடியாக அதிகரித்துள்ளது. 20 ஆண்டுகளில் அது எப்படி இவ்வளவு வளர்ந்தது? அதற்கு பெங்களூரு - மைசூரு உள்கட்டமைப்பு வழித்தடத் திட்டம்தான் காரணம்” என்றார்.

மேலும், நந்தி உள்கட்டமைப்பு காரிடார் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அசோக் கேனியை கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் டி.கே. சிவகுமார் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றார்.

Summary

Rs. 3 lakh crore corruption - Rs. 4 crores to Rs. 1,413 crores increased by D.K. Sivakumar Property

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.