தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

காவிரி நதிநீர் பங்கீடு: தில்லி செல்லும் கர்நாடக முதல்வர்!

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தில்லி செல்லவுள்ளது குறித்து...

CM DK Shivakumar

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார். - கோப்புப் படம்

Published On :

காவிரி நதிநீர் விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் நாளை (ஆக. 27) தில்லி செல்லவுள்ளார்.

காவிரி நதிநீர் பிரச்னை குறித்து ஆலோசிப்பதற்கு தில்லியில் உள்ள மத்திய அமைச்சர்களையும், கர்நாடகத்துக்காக வாதாடும் உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்களையும் சந்திப்பதற்காக முதல்வர் டி.கே. சிவகுமார் நாளை (ஆக. 27) தில்லி செல்கிறார்.

முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள நேர அட்டவணையில், நாளை காலை 9.55 மணிக்கு டி.கே. சிவகுமார் தில்லியில் இருப்பார். சந்திப்புகளை நிறைவுசெய்த பின்னர், அன்றிரவே கர்நாடகத்துக்குத் திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் மற்றும் வழக்கறிஞர்களைச் சந்திக்க தில்லி சென்றாலும், அங்குள்ள முக்கிய காங்கிரஸ் தலைவர்களையும் சந்திப்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கர்நாடக அமைச்சரவையில் ஒரு பெண் அமைச்சர் கூட இல்லாதது பெரும்பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசுக்குச் சொந்தமான பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகத்தில் கோடிக்கணக்கான பணத்தை கையாடல் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், அமைச்சர் பி. நாகேந்திராவை பதவி நீக்கம் செய்யக் கோரி, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக போராடி வருகிறது. எனவே, இந்தப் பிரச்னை குறித்தும் காங்கிரஸ் தலைமையிடம் டி.கே. சிவகுமார் கலந்தாலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தமிழகத்துக்கு அடுத்த 15 நாள்களுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட தில்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தில்லிக்கான டி.கே. சிவகுமாரின் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Karnataka Deputy Chief Minister D.K. Shivakumar is set to visit Delhi tomorrow (August 27) to hold discussions regarding the Cauvery river water issue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.