இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம்: சீமான்

கர்நாடக வனப்பகுதிக்குள் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக...

News image

சீமான் - கோப்புப் படம்

Updated On :19 ஆகஸ்ட் 2026, 2:11 pm IST

கர்நாடக வனப்பகுதிக்குள் மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு கர்நாடக முதல்வர் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஒரு மாநிலத்தின் விவகாரத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக்கூடாது என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்திருந்தார்.

இதற்குக் கண்டனம் தெரிவித்து சீமான் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:

”கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்சியோ இல்லாது கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம்.

மான் வேட்டையாடியதாகப் பொய்யானக் குற்றச்சாட்டைக் கூறி, மூன்று குற்றமற்ற தமிழர்களைக் கொன்றுகுவித்ததோடு மட்டுமல்லாது, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கருத்துகூட சொல்லக்கூடாது; கண்டனம்கூட தெரிவிக்கக்கூடாது என கர்நாடக முதல்வர் சிவகுமார் பேசியிருப்பது மிக மோசமான அடாவடித்தனத்தின் வெளிப்பாடு.

கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் நாவடக்கிப் பேச வேண்டும். கன்னடர் எனும் தேசிய இனத்தையும், அதன் குடிகளையும் ஆரத்தழுவி முழுதாய் நேசிக்கிறோம். பேரன்பு கொண்டு அம்மக்களோடு உறவுபாராட்ட எண்ணுகிறோம்.

உலகின் எந்த மூலையில் தமிழர்களுக்கு ஒரு இன்னல் விளைந்தாலும் தமிழ்நாட்டிலிருந்து ஆதரவுக்குரல்கள் ஒலிக்கத்தான் செய்யும். அதனைக் கேள்வி கேட்பதற்கு கர்நாடக முதல்வர் சிவக்குமாருக்கு எந்த உரிமையுமில்லை.

ஆகவே, மூன்று அப்பாவித்தமிழர்களைச் சுட்டுக்கொன்ற கர்நாடக அரசின் வனத்துறையினர் மீது கொலைவழக்குப் பதிவுசெய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, 3 பேரின் குடும்பத்தாருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

அதற்கு தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு கர்நாடக அரசுக்கு அரசியல் அழுத்தமும், நெருக்கடியும் கொடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Seeman, Chief Coordinator of the Naam Tamilar Katchi, has stated that the arrogant manner in which the Karnataka Chief Minister spoke after three Tamils ​​were shot dead within the Karnataka forest area represents the height of arrogance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.