போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 96.26 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 473 புள்ளிகளுடனும், நிஃப்டி 134 புள்ளிகளுடன் நிறைவு!!உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!

தலையிடக் கூடாது! 3 தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து டி.கே. சிவகுமார் பதில்

எங்கள் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து டி.கே. சிவகுமார் பதிலளித்துள்ளார்.

TN CM vijay - karnataka CM Sivakumar

தமிழக முதல்வர் விஜய் | கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார். - கோப்புப் படம்

Published On :

கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், எந்த ஒரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கருத்துத் தெரிவித்துள்ளார்.

கா்நாடக மாநிலத்தின் சாம்ராஜ் நகா் மாவட்டத்தில் கா்நாடக வனத்துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் மூவா் கொல்லப்பட்டனர். ஒருவா் படுகாயமடைந்தார்.

இந்த சம்பவத்துக்கு, தமிழகம் சார்பில் முன்வைக்கப்பட்ட கண்டனங்கள் குறித்து கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரிடம் இன்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "ஒவ்வொரு மாநிலத்துக்கும் என்று சில பிரச்னைகள் இருக்கின்றன. எங்கள் மாநிலத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் தங்கள் பணியைச் செய்யட்டும்; நாங்கள் எங்கள் பணியைச் செய்வோம். அவர்களின் நிர்வாகத்தில் நான் தலையிட விரும்பவில்லை. எங்கள் மாநிலத்தின் கண்ணியத்தை நாங்கள் பாதுகாக்க வேண்டும். அவர்கள் தங்கள் பணியைச் செய்ய வேண்டும்; நாங்கள் எங்கள் பணியைச் செய்ய வேண்டும்" என்று பதிலளித்துள்ளார்.

சுட்டுக் கொல்லப்பட்டவா்கள் வேட்டையில் ஈடுபட்டதாகவும் அவா்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் கா்நாடக வனத்துறையினா் தெரிவித்திருந்ததாக சிவகுமார் கூறியிருந்தார். அவர்கள் முதலில் சுட்டதால், தற்காப்புக்காகத்தான் நாங்கள் திருப்பி சுட்டதாகவும் கர்நாடக வனத்துறையினர் கூறியிருந்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

ஆனால், கா்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள், வேட்டையாடச் செல்லவில்லை, காணாமல் போன கால்நடைகளைத் தேடியே அவா்கள் சென்றிருந்ததாகவும் அவர்களது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், எவ்வளவு பெரிய குற்றத்தை செய்திருந்தாலும்கூட, வனத்துறை எப்படி மக்களை சுட்டுக் கொலை செய்ய முடியும் என்று தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தன. அதுபோல, தமிழக முதல்வர் விஜய், கர்நாடகத்தின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவம் இரு மாநில எல்லைப் பகுதியில் பெரும் போராட்டங்களைத் தூண்டியதோடு, தமிழ்நாடு - கர்நாடக அரசுகளுக்கு இடையே ஒரு மோதல் விவகாரமாகவும் உருவெடுத்துள்ளது.

Summary

should not interfere D.K. Shivakumar responds Tamils ​​were killed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.