தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

எஸ்ஐஆரில் மோசடி! மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!

எஸ்ஐஆரில் மோசடி நடைபெற்றதாகக் கூறி மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா...

பெங்களூருவில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி அன்புக்குமார் அலுவலகத்திற்கு வெளியே தர்னாவில் ஈடுபட்ட முதல்வர் டிகே சிவகுமார், அமைச்சர்கள்.

Published On :

கர்நாடகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தில் சதி நடந்துள்ளதாக கூறி தலைமைச் செயல் அதிகாரி அலுவலகத்தில் முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.

கர்நாடகத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணியின் போது, முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து மொத்தமாக நீக்க முயற்சி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில், முன்பே அச்சிடப்பட்ட போலி படிவம்-7 விண்ணப்பங்கள் மூலமாக முஸ்லிம், எஸ்சி, எஸ்டி, ஓபிசி வாக்காளர்களை நீக்கத் திட்டமிட்ட விவகாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, வாக்காளர் பட்டியலில் உள்ள ஒருவரின் பெயர் தவறாக இருந்தாலோ, அவர் இறந்துவிட்டாலோ, வேறு ஊருக்குக் குடிபெயர்ந்துவிட்டாலோ அவரது பெயரை நீக்கக் கோரி படிவம்-7 வழங்கப்படும். ஆனால், பல ஆண்டுகளாக ஒரே பகுதியில் வசித்து வரும் உயிருடன் இருக்கும் வாக்காளர்களை ‘இங்கு இவர் வசிக்கவில்லை’ என்று கூறி நீக்க இந்த படிவம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளது.

படிவம் 7 விண்ணப்பங்கள் மூலம், வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமான பெயர்களை நீக்குவதற்கு முயற்சி நடந்துள்ளதாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த நிலையில், படிவம் 7 விண்ணப்பங்களைப் பயன்படுத்தி தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்குச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறி வழக்குப் பதிவு செய்யவும், விசாரணை நடத்தவும் கோரி, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் வியாழக்கிழமை பெங்களூருவில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வெளியே தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமைத் தேர்தல் அதிகாரிடம் மனு அளித்த பின்னர், முதல்வர் சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் தலைமைத் தேர்தல் அலுவலகப் படிக்கட்டுகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் டிகே சிவகுமார், “பல்லாரியில் உள்ள இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் சுமார் 13,000 படிவம் 7 சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அவை திரும்பப் பெறப்பட்டுள்ளன.

மைசூரு, பெலகாவி, பால்கி ஆகிய தொகுதிகளில் படிவம் 7 வழங்கப்பட்டதற்கான ஆவணங்களையும் காணொளிகளையும் சமர்ப்பித்துள்ளோம். வழக்குப் பதிவு செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்” என்று தெரிவித்தார்.

Summary

Karnataka Chief Minister DK Shivakumar and ministers staged a dharna on the premises of the Chief Electoral Officer’s (CEO) office in Bengaluru on Thursday, demanding registration of a criminal case and a probe into alleged conspiracy to delete names of eligible voters using Form 7 applications.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.