FOLLOW US

ON GOOGLE DISCOVER

அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

கர்நாடகத்தில் 3 தமிழர்கள் கொலை; குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: வனத் துறை அமைச்சர்

கர்நாடகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் விரைவில் வழங்கப்படும்.

News image

வனத்துறை அமைச்சர் ரஞ்சித் - படம்: விடியோ கிளிப்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 10:45 am IST

கர்நாடகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் விரைவில் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் வனத் துறை அமைச்சர் ரஞ்சித் குமார் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று(ஆக. 18) கர்நாடகத்தின் வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

அப்போது, சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுமா? என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்மீது கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர் பேசும்போது, “நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றால், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். கர்நாடக அரசு அறிவித்துள்ள நிதி மிகவும் குறைவு. தமிழக அரசு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வலியுறுத்துகிறேன்” என்றார்.

இது தொடர்பாக சிபிஐ எம்.எல்.ஏ. தளி ராமச்சந்திரன் பேசுகையில், “கர்நாடக வனத்துறை மீது கொலை வழக்குப் பதிய வேண்டும், சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட வேண்டும்” என்றார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய வனத்துறை அமைச்சர், ”முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் ஆணைக்கிணங்க மூன்று பேருக்கும் தலா ரூ. 10 லட்சம் வழங்க வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, விரைவில் வழங்கப்படும்” என்றார்.

Summary

Forest Minister Ranjith Kumar has announced in the Legislative Assembly that a sum of rs. 10 lakh each will soon be provided to the families of the three Tamils ​​shot dead in Karnataka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.