அது அற்புதமான காலம்!
By DIN | Published On : 20th May 2019 12:37 PM | Last Updated : 20th May 2019 02:26 PM | அ+அ அ- |

இது மதுரையில் எடுக்கப்பட்ட படம். மேலமாசி வீதியில் இருந்த நியூ ஜூபிடர் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் மிகப்பெரிய போட்டோ ஸ்டுடியோ அது.
அப்போது மிக சின்ன வயது. படத்தில் கடைசியாக இருக்கும் நண்பர் கட்சித் தோழரா..? இல்லை கூட இருந்த நண்பரா..? யார் என்று ஞபாகத்துக்கு வரவில்லை.
எனது அருகில் இருப்பது தம்பி அமர். அப்போதெல்லாம் மதுரை வீதிகளில்தான் சுற்றிக் கொண்டு இருப்போம். அப்படிப்பட்ட நாள்கள் அவை. அதே ஸ்டுடியோவில் நான், அண்ணன் எல்லோரும் கச்சேரி வாசிப்பது போன்று ஒரு படம் எடுத்தோம். அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட படம்தான் மேலே இருப்பது. அது ஓர் அற்புதமான காலம்!
- இளையராஜா