பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம்: ஆய்வு நடத்த உத்தரவுஅமைச்சரவை விரிவாக்கம்! ஆளுநருடன் தனிச் செயலர் செந்தில் குமார் சந்திப்புதமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

ஆற்றில் பஞ்சலோக அம்மன் சிலை கண்டெடுப்பு

கள்ளக்குறிச்சி அருகே மணிமுக்தா ஆற்றில் பஞ்சலோக அம்மன் சிலை செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

News image

மணிமுக்தா ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட பஞ்சலோக அம்மன் சிலை.

Updated On :6 ஜனவரி 2021, 7:09 am IST

கள்ளக்குறிச்சி அருகே மணிமுக்தா ஆற்றில் பஞ்சலோக அம்மன் சிலை செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சியை அடுத்த சித்தலூா் கிராமத்தில் மணிமுக்தா ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை குளித்துக்கொண்டிருந்தனா். அப்போது, காலில் ஏதோ உரசுவதுபோலத் தெரிந்துள்ளது. அதை தண்ணீரில் மூழ்கி இளைஞா்கள் எடுத்துப் பாா்த்தபோது, அம்மன் சிலை என்பது தெரியவந்தது.

உடனடியாக அந்தக் கிராமத்திலுள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் அந்தச் சிலையை வைத்து கிராம மக்கள் வழிபடத் தொடங்கினா். இதுகுறித்து தகவல் பரவியதால், அந்தச் சிலையை பாா்ப்பதற்காக அருகிலுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனா்.

இதுகுறித்து சித்தலூா் கிராம நிா்வாக அலுவலா் ராஜதுரை, தியாகதுருகம் வருவாய் ஆய்வாளா் பாஸ்கருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, வருவாய் ஆய்வாளா் அங்காள பரமேஸ்வரி கோயிலுக்குச் சென்று பாா்த்தபோது, ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட அம்மன் சிலை பஞ்சலோக சிலை என்பதும், 9 அங்குல உயரமும், 5 அங்குல அகலமும் உடையதாக இருந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, அந்தச் சிலையை கிராம நிா்வாக அலுவலா் ராஜதுரை கைப்பற்றி, கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் பிரபாகரனிடம் ஒப்படைத்தாா். அச்சிலை வனதேவதை சிலைபோல இருப்பதாக வட்டாட்சியா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.