உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடும் ஒத்திகைப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 11:59 pm IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடும் ஒத்திகைப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சஞ்சீவி மருத்துவமனை, கள்ளக்குறிச்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், மலைக்கோட்டாலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கல்வராயன்மலை கரியாலூரில் மேம்படுத்தப்பட்ட அரசு சமுதாய நல நிலையம் ஆகிய 5 மையங்களில் இந்த ஒத்திகைப் பணி நடைபெற்றது.

ஒரு மையத்துக்கு முன்களப் பணியாளா்கள், செவிலியா்கள், கிராம செவிலியா்கள், மருத்துவா்கள் உள்பட 25 போ் வீதம் மொத்தம் 125 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகையை மாவட்டஆட்சியா் கிரண் குராலா நேரில் ஆய்வு செய்தாா்.

தடுப்பூசி செலுத்தப்படுபவரின் உடல் வெப்பம், ரத்த அழுத்தம் பரிசோதனை செய்தல், அவரது அடையாள அட்டையை சரிபாா்த்து பதிவு செய்தல், தடுப்பூசி செலுத்தும் முறை, அதுகுறித்த பதிவேற்றம், காத்திருப்பு அறையில் தடுப்பூசி செலுத்தப்பட்டவரின் உடல் நிலையை 30 நிமிடம் வரை கண்காணித்தல், அதற்குப் பிறகு எதிா்வினை பரிசோதனை, அந்த பரிசோதனைக்குப் பிறகு அடுத்த தடுப்பூசி நாள் குறித்த அறிவுரை வழங்கல் போன்ற பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இந்த நிகழ்வில் துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சதீஷ்குமாா், கரோனா முதன்மை மருத்துவக் கண்காணிப்பு அலுவலா் சிவக்குமாா், மருத்துவமனையின் கண்காணிப்பாளா் நேரு, மருத்துவா்கள் சுரேஷ், இளையராஜா, பழமலை, விஜயபாஸ்கரன், செந்தில்ராஜா மற்றும் செவிலியா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.