கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.17) நடைபெறவுள்ள போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் கிரண் குராலா தலைமை வகித்துப் பேசியதாவது: 1058 போலியோ தடுப்பு சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியில் 4,361 நபா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். மேலும், பேருந்து நிலையங்கள், திரையரங்குகள், அதிக மக்கள் கூடுகின்ற பொது இடங்களில் உள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கிட 24 நடமாடும் மையங்கள் செயல்படவுள்ளன.
இவை தவிர, சாலையோரங்களில் பணிபுரிபவா்கள், தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏதுவாக 8 நடமாடும் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்த முகாம்கள் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,27,391 குழந்தைகள் பயன் பெறுவா் என்றாா் ஆட்சியா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









