/

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: தாள்-I, II க்கான அறிவியல் வினா - விடைகள்

தண்ணீரைப் பற்றியும் அதன் விரவலைப் பற்றியும் படிக்கும் அறிவியல் பிரிவு - நீரியல் (ஹைட்ராலஜி)

News image
Updated On :11 ஆகஸ்ட் 2013, 5:41 pm IST

* புவிப்பரப்பில் உள்ள நீரின் அளவு - 1.4 ஆயிரம் மில்லியன் கன கிலோமீட்டர்

* புவியில் தூய நீரின் அளவு - 3 சதவீதம்

* மனித உடலில் நீரின் சதவீதம் - 65 சதவீதம்

* தக்காளியில் நீரின் சதவீதம் - 95 சதவீதம்

* உருளைக்கிழங்கில் நீரின் சதவீதம் - 80 சதவீதம்

* நாள் ஒன்றுக்கு குடிநீராக பெண்ணுக்கு குறைந்த அளவு தேவைப்படும் நீர் - 1.5 லிட்டர் தூய நீர்

* ஆண்களுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் குடிநீரின் அளவு - 2 லிட்டர்

* ஒரு நபருக்கு தேவைப்படும் திரவ உணவு - 3.4 முதல் 4 லிட்டர்

* நீரானது திரவ நிலையில் இருந்து திண்ம நிலைக்கு எந்த வெப்பநிலையில் மாற்றமடைகிறது - 0 டிகிரி செல்சியஸ்

* திரவ நிலையில் உள்ள நீர் வாயு நிலைக்கு மாறுவது எந்த வெப்பநிலையில் மாற்றமடைகிறது - 100 டிகிரி செல்சியஸ்

* நீரின் ஆவியாதலின் உள்ளுறை வெப்ப மதிப்பு - 537 கலோரி

* நீரின் உருகுதலின் உள்ளுறை வெப்ப மதிப்பு - 79.7 கலோரி/கிராம்

* ஒரு கிராம் பனிக்கட்டியானது 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நீராக மாறத் தேவைப்படும் வெப்ப ஆற்றல் என்பது - உருகுதலின் உள்ளுறை வெப்பம்

* ஒரு கிராம் நீரின் வெப்பநிலையில் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரிக்கத் தேவையான வெப்ப ஆற்றலின் அளவு - தன்வெப்ப ஏற்புத்திறன்

* தன் வெப்ப ஏற்புத்திறனின் அலகு - ஜூல்/கிராம்/கெல்வின்

* பெரும்பாலான பொருட்கள் கரைகின்ற காரணத்தால் நீரை சர்வ கரைப்பான எனலாம்

* கரைபொருளும் கரைப்பானும் சேர்ந்த ஒருபடித்தான் கலவையே - கரைசல்

* நீரின் தன்வெப்ப ஏற்புத்திறனின் மதிப்பு - 4.184 ஜூல்/கிராம்/கெல்வின்

* உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி ஆண்டு தோறும் எவ்வளவு மக்கள் குடிநீர் மாசுபடுலினால் இறக்கின்றனர் - 5 மில்லியன் மக்கள்

* மாசு கலந்த நீரை மனிர்கள் உட்கொள்வதால் ஏற்படும் நோய்கள் - வயிற்றுப்போக்கு, சீதபேதி, மஞ்சள்காமாலை, காலரா, டைபாய்டு

* நீரின் மூலக்கூறு நிறை - 18

* நீரின் மூலக்கூறு வடிவம் - V வடிவம்

* நீரில் ஹைட்ரஜன் ஆக்சிஜனின் எடை இயைபு விகிதம் - 1:8

* நீரில் ஹைட்ரஜன் ஆக்சிஜன் கன அளவு இயைபு விகிதம் - 2:1

* நீர் மூலக்கூறில் வேதியியல் பெயர் - ஹைட்ரஜன் மோனாக்சைடு அல்லது ஆக்சிஜன் ஹைட்ரைடு.

* நீரின் கன அளவு இயைபை கண்டறியும் சோதனையின் பெயர் - ஹாப்மன் முறை

* நீரின் கன அளவு இயைபைக் கண்டறிய உதவும் உபகரணத்தின் பெயர் - ஹாப்மன் வோல்டா மீட்டர்

* ஒரு வளிமண்டல அழுத்தத்தில் நீரின் உறைநிலை - 0 டிகிரி செல்சியஸ்

* ஒரு வளிமண்டல அழுத்தத்தில் நீரின் கொதிநிலை - 100 டிகிரி செல்சியஸ்

* தூய நீர் மின்னோட்டத்தைக் கடத்துமா - கடத்தாது

* பனிக்கட்டி நீரில் மிதக்கக் காரணம் - 0 டிகிரி செல்சியசில் ஒருகுறிப்பிட்ட நிறையை உடைய பனிக்கட்டியின் பருமன் அதே நிறையை உடைய நீரின் பருமனை விட அதிகம்.

* கடல்நீரில் உப்பின் சதவீதம் - 3.5 சதவீதம்

* கடல் நீரில் அதிகமாகக் காணப்படுவது - சோடியம் குளோரைடு (2.8 சதவீதம்)

* கடல்நீரிலிருந்து உப்புக்கள் எந்த முறையின் மூலம் தயாரிக்கப்படுகிறது - ஆவியாதல் முறையின் மூலம்

* அயோடின் பற்றாக்குறையால் உருவாகும் நோய் - முன் கழுத்து கழலை

* கடல் நீரிலிருந்து தூய நீர் எந்த முறையின் மூலம் பெறப்படுகிறது - எதிர் சவ்வூடு பரவல் முறை

* நீரேற்று நிலையங்களில் நீரில் உள்ள கசடுகளை வீழ்படிவாக்குவதற்காக நீருடன் சேர்க்கப்படும் வேதிப்பொருள் - பொட்டாஷ் படிகாரம் மற்றும் சுண்ணாம்பு

* நீரின் மிகப்பெரிய இயற்கை ஆதாரம் - கடல்

* நீரின் அடர்த்தி அதன் பருமனுக்கு எதிர் விகிதத்தில் உள்ளது.

* ஹாப்மன் வோல்டா மீட்டரில் நீரை மின்னாற்பகுக்க எதிர்மின்வாயில் ஹைட்ரஜன் வாயும், நேர் மின்வாயில் ஆக்சிஜன் வாயுவும் சேகரமாகும்.

* நீர் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகிய இரு தனிமங்களால் ஆனது என்று கண்டறிந்தவர் - ஏ.எல்.லவாய்சியர் (1783)

* இரு கன அளவு ஹைட்ரஜனும், ஒரு கன அளவு ஆக்சிஜனும் சேர்ந்த கலவையை எரி்த்து நீரைத் தயாரித்தவர் - ஹென்றி காவண்டிஷ் (1781)

* உள்ளுறை வெப்பத்தின் அலகு - கலோரி/கிராம்

* நுண்ணுயிரிக் கொல்லியாகப் பயன்படுவது - சலவைத் தூள்

* உறையும்போது கன அளவு அதிகரிக்கும் பொருள் - நீர்

* இந்தியாவில் நீர் மாசுபாடு அடைந்திருப்பதன் சதவீதம் - 70 சதவீதம்.

* அமிலம் கலந்த நீரை மின்னாற்பகுக்கும்போது ஹைட்ரஜனும்,ஆக்சிஜனும் கிடைக்கிறது.

* நீரின் மூன்று நிலைகள் - திட, திரவ, வாயு

* 4 டிகிரி செல்சியத்தில் நீரின் அடர்த்தி 1 கிராம்/கன சென்டிமீட்டர் என்றால் பனிக்கட்டியின் அடர்த்தி - 0.91 கிராம்/கன சென்மீட்டர்

* தண்ணீரைப் பற்றியும் அதன் விரவலைப் பற்றியும் படிக்கும் அறிவியல் பிரிவு - நீரியல் (ஹைட்ராலஜி)

* தொழிற்சாலைக் கழிவுகளில் உள்ள கரிம மாசுக்களை காற்றில் உள்ள பாக்டீரியாக்களைக் கொண்டு சிதைந்த பின்னரே அக்கழிவுகளை வெளியேற்ற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.