மும்பையில் பள்ளிப் பேருந்தின் மீது மரம் விழுந்ததில் 11 வயதுடைய ஒரு மாணவர் பலியானதோடு நான்கு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) தெரிவித்தனர்.
மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் இன்று மதியம் மழை பெய்து கொண்டிருந்தது. இதனால், பிற்பகல் 3 மணியளவில் சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளி வாகனம் மீது ஒரு மரம் திடீரென முறிந்து விழுந்தது.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினரும் மற்ற மீட்புப் படையினரும் பள்ளி வாகனத்தில் இருந்த 12 பேரையும் மீட்டனர்.
12 பேரில், காயங்களுடன் இருந்த ஐந்து பேரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
காயமடைந்த ஐந்து பேரில் நான்கு பேர் சீரான நிலையில் உள்ளதாகவும் 11 வயதான விஹான் ஸ்ரீவஸ்தவா என்ற மாணவர் மட்டும் உயிரிழந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Officials stated on Tuesday (June 30) that an 11-year-old student was killed and four others were injured when a tree fell on a school bus in Mumbai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரி மாணவர் சேர்க்கை தேர்வுக்குழுவில் ஒரு பெண்கூட இடம்பெறவில்லை: கனிமொழி

தவறுதலாக அனுப்பிய ரூ, 15,682: ஆட்டோ ஓட்டுநரின் செயலால் நெகிழ்ந்த நிறுவனத் தலைவர்!

ஹரியாணா: பள்ளி கூரையின் மீது சுவர் இடிந்து விழுந்ததில் 10 மாணவர்கள் காயம்

மரம் முறிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI




