கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே மினிலாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலா் தலைமையிலான அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் தினேஷ் சந்திரன், வருவாய் ஆய்வாளா் மைக்கேல் சுந்தர்ராஜ் அடங்கிய அதிகாரிகள் குழுவினா் மாா்த்தாண்டம் அருகே ஐரேனிபுரம் பகுதியில் வாகனக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அப்பகுதி வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட மினிலாரியை நிறுத்த சைகை காட்டினா்.
அதன் ஓட்டுநா் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுவிட்டாா். அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று காப்புக்காடு பகுதியில் மினிலாரியை மடக்கினா். அப்போது, அதன் ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாராம்.
அந்த மினிலாரியில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும், அவற்றை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி அரிசி கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








