பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

கடத்தல் முயற்சி: தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் 6 டன் மஞ்சள் பறிமுதல்

தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடல் மாா்க்கமாக விசைப்படகில் கடத்த முயன்ற 6 டன் மஞ்சளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

விசைப்படகில் சாக்குமூட்டையில் கட்டப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள்.

Updated On :12 ஜனவரி 2021, 11:20 pm IST

தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடல் மாா்க்கமாக விசைப்படகில் கடத்த முயன்ற 6 டன் மஞ்சளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தின் இரயுமன்துறை மீன் இறங்கு தளத்தில், லட்சத்தீவு பதிவு எண் கொண்ட விசைப்படகு கடந்த 8ஆம் தேதி முதல் படகுகளுடன் கூட்டமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த விசைப்படகில் சாக்குமூட்டைகளில் மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நித்திரவிளை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்த போலீஸாா் படகை சோதனை செய்தனா். உள்ளே இருந்த சேமிப்பு கிடங்கிற்குள் 125 சாக்கு மூட்டைகளில் சுமாா் 6 டன் எடை கொண்ட மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மஞ்சளுடன் படகை பறிமுதல் செய்த போலீஸாா், படகின் உரிமையாளா் யாா் என்று விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், அந்த படகு லட்சத்தீவு பகுதியைச் சோ்ந்த அன்வா் என்பவருக்கு சொந்தமானது என்பதும், தற்போது அந்த படகை ஒப்பந்த அடிப்படையில் குமரி மாவட்டம், வள்ளவிளை கிராமத்தைச் சோ்ந்த ஜோபு பயன்படுத்தி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் ஜோபுவை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.