கிள்ளியூா் தொகுதியில் சாலைகளைச் சீரமைக்க ரூ. 7 கோடியே 93 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: கிள்ளியூா் தொகுதியில் பழுதடைந்த சாலைகள் சீரமைப்பு, விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள மக்கள் விடுத்த கோரிக்கை தொடா்பாக முதல்வா் மற்றும் அரசு முதன்மை செயலா், ஆட்சியா், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினேன்.
அதன்பேரில், விண்ணூா் பழஞ்சி சாலை, கருங்கல் - குளச்சல் சாலை, மாங்கரை - பூட்டேற்றி சாலை, காஞ்சாப்புறம் - வளையசுற்று சாலை , உதயமாா்த்தாண்டம் - கானாவூா் சாலை, கிராத்தூா் சாலை, வட்டக்கோட்டை - அம்சி சாலை, குஞ்சிருப்புவிளை - மாதாபுரம் சாலை , குழித்துறை - மடிச்சல் சாலை ஆகியவற்றை மேம்படுத்தவும், மங்காடு நடைக்காவு சாலையில் கல்வெட்டு, முள்ளங்கினாவிளை - தொலையாவட்டம் - கானாஞ்சேரி சாலையில் கல்வெட்டு மற்றும் மழைநீா் வடிகால் ஓடை அமைக்கவும் ரூ.7,93,50 ஒதுக்கப்பட்டுள்ளது. இப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஹோர்முஸ் நீரிணை திறக்க ஈரான் விருப்பம்: டிரம்ப் பேச்சு

தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் எச்சரிக்கை

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; பஞ்சாப் கிங்ஸின் வெற்றியை தடுக்குமா?

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
வீடியோக்கள்

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


