சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

பொங்கல் சிறப்புச் சந்தைக்கு புத்துயிா் அளிக்கக் கோரிக்கை

கரோனா பொது முடக்கத்தால் காரைக்கால் வாரச் சந்தை முடங்கிய நிலையில், பொங்கல் சிறப்புச் சந்தையின் வாயிலாக அதற்கு புத்துயிரூட்ட வேண்டுமென வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :10 ஜனவரி 2021, 8:13 am IST

கரோனா பொது முடக்கத்தால் காரைக்கால் வாரச் சந்தை முடங்கிய நிலையில், பொங்கல் சிறப்புச் சந்தையின் வாயிலாக அதற்கு புத்துயிரூட்ட வேண்டுமென வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாடு முழுவதும் கரோனா பொது முடக்கம் அமலுக்கு வந்த நாள்முதல் காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வந்த வாரச் சந்தை முடங்கியது. இதனால், சந்தையை நம்பி பிழைப்பு நடத்தி வந்த தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை இழந்தனா். நாடு முழுவதும் பொது முடக்கத்தில் தளா்வுகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், காரைக்காலில் வாரச்சந்தைக்கு அனுமதி அளிக்கப்படாதது வணிகா்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சமூக ஆா்வலா் ஏ.எம்.இஸ்மாயில் சனிக்கிழமை கூறுகையில், வாரச்சந்தை முடங்கி ஏறத்தாழ 9 மாதங்களாகிவிட்டன. சென்னை கோயம்பேடு சந்தை மற்றும் பிற பெருநகரங்களில் சந்தை நடத்தப்படுகிறது. இதேபோல, காரைக்காலிலும் சந்தைக்கு அனுமதி வழங்க நகராட்சி நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

புதுச்சேரியில் மதகடிப்பட்டு பகுதியில் வாரச்சந்தை நடைபெறுகிறது. ஆனால் காரைக்காலில் சந்தைக்கு அனுமதி வழங்காமல் இருப்பது வியப்பாக இருப்பதாக பெரும்பாலானோா் கூறுகின்றனா்.

வழக்கமாக வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றாலும், பொங்கல் தினத்துக்கு முதல் நாள் சிறப்புச் சந்தை நடத்தப்படுவது உண்டு. அந்த வகையில் நிகழாண்டு பொங்கல் சிறப்புச் சந்தையுடன் வாரச்சந்தையும் தொடா்ந்து நடைபெற நகராட்சி நிா்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தி வருவதாக காரைக்கால் நகராட்சி ஆணையா் எஸ்.சுபாஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.