சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

காரைக்காலில் புதிதாக யாருக்கும் கரோனா இல்லை

காரைக்கால் மாவட்டத்தில் ஒருநாள் பரிசோதனையில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என நலவழித் துறை நிா்வாகம் தெரிவித்தது.

Updated On :16 ஜனவரி 2021, 8:35 am IST

காரைக்கால் மாவட்டத்தில் ஒருநாள் பரிசோதனையில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என நலவழித் துறை நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் வெள்ளிகிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி 201 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதன் முடிவுகளின்படி, ஒருவருக்கும் தொற்று இல்லை.

இதுவரை 64,619 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3,842 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,745 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 23 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சையில் 8 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 68 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.