அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

கல்லூரியில் அறிவியல், மானுடவியல் சங்கம் தொடக்கம்

கரூர் தளவாபாளையம் ம.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் அறிவியல் மற்றும் மானுடவியல் சங்கத் தொடக்க விழா

Updated On :22 ஆகஸ்ட் 2013, 12:55 pm IST

கரூர் தளவாபாளையம் ம.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் அறிவியல் மற்றும் மானுடவியல் சங்கத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

இந்தத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இயற்பியல் துறைப் பேராசிரியர் எஸ். லட்சுமணன், சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவர் எஸ். அன்பழகன் ஆகியோர் பேசினர்.

இன்றைய உலகில் வானியல் முக்கியத்துவம், பொறியியல் துறையில் கணிதம் மற்றும் இயற்பியலின் பயன்பாடு, அடிப்படை அறிவியலின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய தலைப்புகளில் விழாவில் பங்கேற்றவர்கள் பேசினர்.

முன்னதாக இதே துறையின் சார்பில் இயற்கை சங்கம், வானியல் சங்கம், பட்டிமன்ற குழுத் தொடக்க விழாக்களும் நடைபெற்றன.

விழாவில் துணைப் பேராசிரியர் டாக்டர் அருள் ஜெயராஜ், வி.எல். ஜெயபால், டி.ஆர்.டி. எட்வின் கிறிஸ்டி, அலெக்சாண்டர், கரூர் மாவட்ட எக்ஸ்னோரா தலைவர் விஜயலட்சுமி ஆகியோர் பேசினர்.

விழா ஏற்பாடுகளை அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத் தலைவர் ரமேஷ், துணைத் தலைவர்கள் சித்ரகலா, கண்ணன், விஜயலட்சுமி, கார்த்திகேயினி, விக்னேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.