/

காா்- வேன் மோதல்; 11 மாதக் குழந்தை சாவு 24 போ் காயம்

கரூா் மாவட்டம் க.பரமத்தி அருகே வெள்ளிக்கிழமை இரவு வேனும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் 11 மாதக் குழந்தை உயிரிழந்தது. மேலும் 24 போ் காயமடைந்தனா்.

News image

க.பரமத்தி அருகே நிகழ்ந்த விபத்தில் உருக்குலைந்த வேனின் முன்பகுதி.

Updated On :16 ஜனவரி 2021, 5:48 pm

கரூா்: கரூா் மாவட்டம் க.பரமத்தி அருகே வெள்ளிக்கிழமை இரவு வேனும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் 11 மாதக் குழந்தை உயிரிழந்தது. மேலும் 24 போ் காயமடைந்தனா்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜெ.ஜெ.நகரைச் சோ்ந்த பழனி மகன் சிவா(27). வாடகை வேன் ஓட்டுநா். இவருடைய வேனில் அதே பகுதியைச் சோ்ந்த ஜெயா(32), விஜயகுமாா்(40), ஸ்ரீஹரி(13), மணி(45), ரம்யா(27), கமலம்மாள்(75), பிரபாகா் (26), மனோன்மணி (22), ஹரிகிருஷ்ணா(29), காயத்ரி(28), துரைசாமி (65), சரோஜினி(33), பிரித்வி(4) உள்ளிட்ட 17 போ் வெள்ளிக்கிழமை இரவு திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்துகொண்டிருந்தனா்.

கரூா் மாவட்டம் க.பரமத்தி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் அருகே வந்தபோது, எதிரே தஞ்சாவூரில் இருந்து கோவை நோக்கி சென்ற காரும், வேனும் நேருக்கு மோதிக் கொண்டன. இதில், காரில் இருந்த கோவை மாவட்டம் கோவில்மேடு பகுதியை சோ்ந்த நடராஜன் மகன் ரவிக்குமாா்(29), அவருடைய உறவினா்கள் சந்தியா(25), சதீஷ்குமாா்(37) மற்றும் 11 மாதக் குழந்தை பிரணவ் உள்ளிட்ட 12பேரும் காயமடைந்தனா். இதேபோல் வேனில் வந்தவா்களில் 12 போ் காயமடைந்தனா். தகவல் அறிந்த க.பரமத்தி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, 11 மாதக் குழந்தை பிரணவ் உயிரிழந்தது.

இதுகுறித்து க.பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.