ரயில் தண்டவாளத்தில் கட்டைகளுக்குக் கீழே ஏன் கற்களைக் கொட்டி வைக்கிறார்கள்?
தண்டவாளங்களுக்கு இடையே உள்ள கற்களுக்கு ஆங்கிலத்தில் டிராக் பேலஸ்ட் (Track Ballast), தண்டவாளத்தில் இருக்கும் கட்டைகளுக்குப் பெயர் ஸ்லீப் (To Sleeper). இந்த ஸ்லீப்பர்கள் முற்காலத்தில் மரக்கட்டைகளால் அமைக்கப்பட்டன. தற்காலத்தில் கான்க்ரீட் பிளாக்குகளால் அமைந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள். இது நவீன கால முன்னேற்றம்.
சரி, கற்களை ஏன் கொட்டிவைக்க வேண்டும்.
இந்தக் கற்கள் எல்லாம் ஒரே அளவைக் கொண்டிருக்கும். இதற்கும் இந்த அளவில்தான் இருக்க வேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கிறது. அளவு மாறினால் ஆபத்து. இந்தக் கற்கள் அவ்வளவு சீக்கிரம் காற்றாலோ வேறு விதமாகவோ இடம் மாறாதவை. அப்படியே அசையாமல் கிடக்கும். அந்த அளவுக்கு இறுக்கமாக அமைக்கப்பட்டிருக்கும்.
மழை பெய்தாலும் இவை இடம்மாறாமல் இருந்து தண்ட வாளத்துக்குப் பாதிப்பு வராமல், அந்தக் கட்டைகளை இப்படி அப்படி அசையாமல் பார்த்துக் கொள்ளும், மேலும் தண்டவாளத்துக்கு இடையே செடிகள் முளைத்து இடையூறு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளும். தண்டவாளக் கட்டைகளை இறுக்கமாக வைத்திருக்கும் வேறுவிதமான பாதிப்புகள் வராமல் இருப்பதற்கும்தான் இந்தக் கற்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.